
The Thavamani Times,
Published on Junev27,
போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தமிழகம் முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்க உள்ளது.
சென்னை பாலவாக்கத்தில் உள்ள ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடக்கும் நிகழ்வில், முதலமைச்சர் விஜய் பங்கேற்று முகாமை தொடங்கி வைக்க உள்ளார். தமிழகம் முழுவதும் 52.91 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட இருக்கிறது.
அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிக் கூடங்கள், பஸ்நிலையங்கள், ரெயில் நிலையங்கள், சுங்கசாவடிகள், சோதனை சாவடிகள், விமான நிலையங்கள், மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் என மொத்தம் 43,051 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.
மேலும் நடமாடும் மருத்துவக்குழுக்கள் மூலமாக தொலைதூர மற்றும் எளிதில் சென்றடைய முடியாத பகுதிகள், மலைப்பகுதிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது.
முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க இருக்கும் முகாம் தொடர்பாக, பாலவாக்கம் ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் நடந்து வரும் ஏற்பாடுகளை மாநகராட்சி கமிஷனர் ஜி.எஸ்.சமீரன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.








