The Thavamani Times – The Thavamani Times https://thethavamanitimes.com Mon, 10 Aug 2026 14:58:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.3 https://thethavamanitimes.com/wp-content/uploads/2026/06/cropped-7ec2082f-6e71-49d3-bef0-3dd3de5b543a-32x32.png The Thavamani Times – The Thavamani Times https://thethavamanitimes.com 32 32 பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு சட்டத்தினை தமிழக அரசு உடனடியாக கொண்டு வர வேண்டும்-  டியுஜெ செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் https://thethavamanitimes.com/uncategorized/the-tamil-government-must-immediately-bring-in-the-journalist-protection-act-resolution-passed-at-the-tuj-executive-committee-meeting/ https://thethavamanitimes.com/uncategorized/the-tamil-government-must-immediately-bring-in-the-journalist-protection-act-resolution-passed-at-the-tuj-executive-committee-meeting/#respond Mon, 10 Aug 2026 14:58:26 +0000 https://thethavamanitimes.com/?p=2793 பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு சட்டத்தினை தமிழக அரசு உடனடியாக கொண்டு வர வேண்டும்

சாத்தனூர் அணையில் நடைபெற்ற திருவண்ணாமலை மாவட்ட டியுஜெ செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

திருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் ன் மாவட்ட செயற்குழு கூட்டம் சாத்தனூர் அணையில் மாவட்டத் தலைவர் வந்தவாசி ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாநில மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் போளூர் சுரேஷ், மாநில துணைப் பொதுச் செயலாளர் நடராஜன், மாநில அமைப்பு செயலாளர் தனஞ்செயன், மாவட்ட பொருளாளர் சாலமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அனைவரையும் மாவட்ட இணை செயலாளர் வேல்முருகன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மாநில தலைவர் சாம்பியன் கே முத்து, மாநில பொதுச் செயலாளர் பி ஆர் வேளாங்கன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் மறைந்த மாநில தலைவர் தோழர் புருஷோத்தமன் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

புதியதாக தேர்வு செய்யப்பட்ட மாநில தலைவர் கே முத்து, மாநில பொதுச் செயலாளர் பி ஆர் வேளாங்கன், மாநில துணை பொதுச் செயலாளர் நடராஜன், மாநில அமைப்பு செயலாளர் தனஞ்செயன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் தினமலர் மற்றும் தினகரன் செய்தியாளர்களை தாக்கிய சட்டமன்ற உறுப்பினர் கபில் மற்றும் அவரது சகோதரர் ஆகியோருக்கு கண்டனங்களை இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது. பத்திரிகையாளர்களை தாக்கிய இவர்கள் மீது தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சட்டத்தினை தமிழக அரசு உடனடியாக கொண்டு வர இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
இதற்கான வழிமுறைகளை மாநில சங்கம் வடிவமைத்து அரசுக்கு பரிந்துரைக்க இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

சேத்துப்பட்டு பகுதி தாலுக்கா ஒருங்கிணைப்பாளராக உறுப்பினர் தினேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை பகுதியில் உறுப்பினர் சேர்க்கையை வலுப்படுத்த மேலும் ஒருவரை தாலுக்கா ஒருங்கிணைப்பாளராக நியமிக்க இக்கூட்டம் பரிந்துரைக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட டியுஜெ அமைப்பும், மற்ற பகுதியில் அதன் கிளைகளாகத்தான் இந்த அமைப்பு செயல்படும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் தேசிய கவுன்சில் உறுப்பினர் சேது, மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் சேகர், லிங்கப்பன், மாவட்ட துணைத் தலைவர் விஜயகுமார், பாபு, இணை செயலாளர்கள் கே பி சேகர், ஜி ஏழுமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ், லட்சுமணன், குமார், புருஷோத்தமன், அகிலன், அருள்மணி, இணையத்துல்லா பிரேம்குமார் செந்தமிழ் செல்வன், சரவணகுமார் மற்றும் தாலுக்கா ஒருங்கிணைப்பாளர்கள் ராமகிருஷ்ணன், ராஜேஷ்குமார், ராஜி, சீனிவாசன், கதிரவன், சாந்தசீலன், சரவணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தண்டராம்பட்டு பகுதி ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் நன்றி கூறினார்

]]>
https://thethavamanitimes.com/uncategorized/the-tamil-government-must-immediately-bring-in-the-journalist-protection-act-resolution-passed-at-the-tuj-executive-committee-meeting/feed/ 0
புதுப்பாளையம் இதயா மகளிர் கல்லூரியில் ஒருநாள் தேசிய கருத்தரங்கம் https://thethavamanitimes.com/district-news/one-day-national-seminar-at-idhaya-womens-college-pudupalayam/ https://thethavamanitimes.com/district-news/one-day-national-seminar-at-idhaya-womens-college-pudupalayam/#respond Fri, 31 Jul 2026 14:47:17 +0000 https://thethavamanitimes.com/?p=2788 The Thavamani Times :

புதுப்பாளையம் இதயா மகளிர் கல்லூரியில் ஒருநாள் தேசிய கருத்தரங்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், புதுப்பாளையத்தில் அமைந்துள்ள இதயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை சார்பில், “மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் டிஜிட்டல் எதிர்காலத்தில் புதிய பரிமாணங்கள்” என்ற தலைப்பில் ஒருநாள் தேசிய கருத்தரங்கம் கல்லூரி அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் விமலி தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் அருட்சகோதரி சம்பூர்ணா மேரி வரவேற்புரை ஆற்றினார். நிர்வாக செயலாளர் அருட்சகோதரி சந்தன மேரி முன்னிலை வகித்தார்.

கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை டாக்டர் சகுந்தலா பொறியியல் கல்லூரி ஆங்கிலத் துறை உதவி பேராசிரியர் டாக்டர் ஐ. அமல்ராஜ், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாணவர்கள் தங்களது அறிவையும் திறன்களையும் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ள வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார். ஆங்கில மொழிப் புலமை, ஆராய்ச்சி மனப்பான்மை மற்றும் தகவல் பரிமாற்றத் திறன் ஆகியவை இன்றைய உலகில் மாணவர்களின் கல்வி மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், குடியாத்தம் அரசு திருமகள் மில்ஸ் கல்லூரி ஆங்கிலத் துறையின் விருந்தினர் விரிவுரையாளர் டாக்டர் ஐ. இளையகுமார் பேசுகையில், மொழி, இலக்கியம் மற்றும் பண்பாடு ஆகியவை மனித சமூகத்தின் அடையாளங்களாகும் என்றார். டிஜிட்டல் யுகத்தில் செயற்கை நுண்ணறிவு, இணையவழி கற்றல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை மாணவர்கள் திறம்பட பயன்படுத்தி கல்வி மற்றும் ஆராய்ச்சித் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

கருத்தரங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆங்கிலத் துறைத் தலைவர் பி.எல். ஆண்டனி சாந்தி செய்திருந்தார்.

இந்த தேசிய கருத்தரங்கில் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் தொடர்பாக பல்வேறு கருத்துகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் பகிரப்பட்டன. பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவிகள் உள்ளிட்ட பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டு கருத்தரங்கின் மூலம் பயனடைந்தனர்.

]]>
https://thethavamanitimes.com/district-news/one-day-national-seminar-at-idhaya-womens-college-pudupalayam/feed/ 0
இதயா மகளிர் கல்லூரியில் பாராளுமன்ற அமைச்சரவை பதவியேற்பு விழா.. https://thethavamanitimes.com/district-news/parliamentary-cabinet-inauguration-ceremony-at-idhaya-college-for-women/ https://thethavamanitimes.com/district-news/parliamentary-cabinet-inauguration-ceremony-at-idhaya-college-for-women/#respond Wed, 29 Jul 2026 13:26:03 +0000 https://thethavamanitimes.com/?p=2785 THE THAVAMANI TIMES :

திருவண்ணாமலை, ஜூலை 29:

திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை அடுத்த புதுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் இதயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாராளுமன்ற அமைச்சரவை நிர்வாகிகளுக்கான “Investiture Ceremony – 2026” (பதவியேற்பு விழா) கல்லூரி அரங்கில் நடைபெற்றது .

விழாவில் கல்லூரியின் செயலர் அருட் சகோதரி சம்பூர்ண மேரி, முதல்வர் அருட்சகோதரி முனைவர் லூர்து மேரி, நிர்வாகி அருட்சகோதரி சந்தன மேரி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்வை தொடங்கி வைத்தனர். நிகழ்வின் முன்னதாககல்லூரியின் செயலர் அருட் சகோதரி சம்பூர்ண மேரி அனைவரையும் வரவேற்று பேசினார் 

 பதவி ஏற்பு விழாவில் 

OBU Skilltech and Innovation Centre நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி முனைவர் ஒப்புலி சாமி பார்த்திப கார்த்திகேயன் தலைமை விருந்தினராகவும், அதே நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் செயல்பாட்டு அலுவலர் கே. ஜெயபிரகாஷ் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர் கல்லூரியில் மாதிரி பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு .தேர்தலில் வென்ற மாணவிகளின் தலைவர் ஷெர்லின் 

துணைத்தலைவர் லெனினா மாணவச் செயலர் ஆதிலட்சுமி , துணைச் செயலர் சையத் சமீரா , மற்றும் அமைச்சரவை மாணவிகளுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் பதவியேற்பு செய்து வைத்து அவர்களின் பொறுப்புகளை உணர்த்தும் வகையில்ஆளுமைத் திறன் என்பது வெளிப்புற தோற்றம் மட்டுமல்ல. ஒருவரின் சிந்தனை, பேச்சு, நடத்தை, ஒழுக்கம், பொறுப்புணர்வு, தன்னம்பிக்கை மற்றும் பிறரை மதிக்கும் பண்பு ஆகிய அனைத்தும் இணைந்ததே உண்மையான ஆளுமையாகும்.

ஒரு மாணவர் புத்தக அறிவைப் பெறுவது மட்டுமே போதாது. நல்ல குணநலன்கள், நேரத்தை மதிக்கும் பழக்கம், குழுவாக செயல்படும் திறன், பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திறன் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவையும் அவசியம்., என்று சிறப்புரை ஆற்றி வாழ்த்துக்களை தெரிவித்தனர். மாணவிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்று தங்களது பதவிக்கான பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர்.

கல்லூரி செயலாளர் அருட்சகோதரி சம்பூர்ணா மேரி, முதல்வர் அருட்சகோதரி டாக்டர் லூர்து மேரி, நிர்வாகி அருட்சகோதரி மேரி சந்தானம் ஆகியோர் விழாவிற்கு தலைமை தாங்கி சிறப்பிக்க உள்ளனர்.

மாணவர்களிடம் தலைமைத்துவம், பொறுப்புணர்வு, ஒழுக்கம் மற்றும் சேவை மனப்பான்மையை வளர்க்கும் நோக்கில் நடைபெறும் இந்த பதவியேற்பு விழாவில்,அக்பர் பாஷா இயக்குநர் மற்றும் சுரேஷ் ரோட்டரி கிளப் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். 

 கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக பங்கேற்றனர். இறுதியில் முதல்வர் மற்றும் செயலர் மாணவிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றிய நிகழ்வை இனிதே நிறைவு செய்தனர்.

]]>
https://thethavamanitimes.com/district-news/parliamentary-cabinet-inauguration-ceremony-at-idhaya-college-for-women/feed/ 0
ஆன்லைன் தன்னெண்ணிக்கை முகாம் தொடக்கம் https://thethavamanitimes.com/district-news/online-self-reflection-camp-begins/ https://thethavamanitimes.com/district-news/online-self-reflection-camp-begins/#respond Sun, 19 Jul 2026 12:19:01 +0000 https://thethavamanitimes.com/?p=2779 மதுரை | 19.07.2026

இந்திய மக்கள் தொகை 2027 கணக்கெடுப்பிற்கான ஆன்லைன் தன்னெண்ணிக்கை முகாம் தொடக்கம்

தமிழக முதல்வர் அன்னாமலை விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்திய மக்கள் தொகை 2027-க்கான ஆன்லைன் தன்னெண்ணிக்கை (Self Enumeration) முகாம் தொடங்கப்பட்டது.

மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட வில்லங்குடி 20-வது வார்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த முகாமின் மூலம், பொதுமக்கள் தங்களது விவரங்களை நேரடியாக ஆன்லைனில் பதிவு செய்து, மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தேசிய திட்டமிடலுக்குத் தேவையான துல்லியமான தரவுகளை சேகரிக்க இந்த முயற்சி உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு முகாமை மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீ தங்கபாண்டி அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

]]>
https://thethavamanitimes.com/district-news/online-self-reflection-camp-begins/feed/ 0
ஜவ்வாதுமலையில் 26-வது கோடை விழா கோலாகலம் https://thethavamanitimes.com/district-news/the-26th-summer-festival-at-jawadhu-hills-in-full-grandeur/ https://thethavamanitimes.com/district-news/the-26th-summer-festival-at-jawadhu-hills-in-full-grandeur/#respond Sat, 18 Jul 2026 16:27:44 +0000 https://thethavamanitimes.com/?p=2770 ஜவ்வாதுமலையில் 26-வது கோடை விழா கோலாகலம்

ரூ.111.25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் – ரூ.65.66 கோடியில் நிறைவு பெற்ற 128 வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு

கலசப்பாக்கம், ஜூலை 19:

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜமுனாமரத்தூர் ஜவ்வாதுமலையில் நடைபெற்ற 26-வது கோடை விழாவை, தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் செ. ராஜேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். விழாவில் ரூ.65.66 கோடி மதிப்பீட்டில் நிறைவு பெற்ற 128 வளர்ச்சித் திட்டங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டதுடன், ரூ.111.25 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் 27,532 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில், ஜமுனாமரத்தூரில் உள்ள செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வந்தனா கார்க் தலைமை தாங்கினார். சுற்றுலா மற்றும் தொல்லியல் துறை இயக்குநரும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநருமான முனைவர் வி.ப. ஜெயசீலன் மற்றும் போளூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர். அபிஷேக் முன்னிலை வகித்தனர்.

விழாவை அமைச்சர்கள் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து, பல்வேறு அரசுத் துறைகளின் பணி விளக்கக் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை, பள்ளிக்கல்வித் துறை, அயலகத் தமிழர் மற்றும் மறுவாழ்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் ரூ.65.66 கோடி மதிப்பீட்டில் நிறைவு பெற்ற 128 திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, தாட்கோ, பிற்படுத்தோர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் ரூ.111.25 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் 27,532 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

பின்னர் பலாமரத்தூர் கிராமத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் திருமணத்தைத் தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கலந்துகொண்டு, குழந்தைத் திருமணத்தின் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து ஜவ்வாதுமலையில் சுற்றுலாத்துறை மேற்கொண்டு வரும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், பரமனந்தல்–அத்திப்பட்டு இடையே நடைபெற்று வரும் 38.333 கிலோமீட்டர் சாலை அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தனர்.

விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி பெண்கள், இளைஞர்கள் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அரசு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், பெண்களின் கல்வி, இளைஞர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, பழங்குடியின மக்களுக்கு பட்டா வழங்குதல், கூடுதல் பள்ளிகள் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார். குழந்தைத் திருமணம் மற்றும் குழந்தைத் தொழிலாளர் முறை போன்ற சமூகத் தீமைகளை முற்றிலும் ஒழிக்க அரசு உறுதியுடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் செ. ராஜேஷ்குமார் பேசுகையில், ஜவ்வாதுமலை கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இயற்கை வளம், பழங்குடியினர் பாரம்பரியம் மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக விளங்குகிறது என்றார். தேன், திணை, பழவகைகள், சந்தனம் உள்ளிட்ட இயற்கை வளங்களால் சிறப்புப் பெற்ற இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தவும், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தையும் குழந்தைகளின் கல்வியையும் உயர்த்தவும் அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார். அரசு துறைகளின் கண்காட்சி அரங்குகள் மூலம் மக்கள் அரசுத் திட்டங்களை அறிந்து பயனடைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா. உதயகுமார், மாவட்ட வன அலுவலர் கு. சுதாகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர் மற்றும் திட்ட இயக்குநர் காஞ்சனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சையது பயாஸ் அஹமத், மாவட்ட சுற்றுலா அலுவலர் வே. கார்த்திக், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் சிவா உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

]]>
https://thethavamanitimes.com/district-news/the-26th-summer-festival-at-jawadhu-hills-in-full-grandeur/feed/ 0
இதயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி – TNPSC அறிமுக மற்றும் வழிகாட்டல் நிகழ்ச்சி https://thethavamanitimes.com/district-news/idhaya-womens-arts-and-science-college-tnpsc-introduction-and-guidance-programme/ https://thethavamanitimes.com/district-news/idhaya-womens-arts-and-science-college-tnpsc-introduction-and-guidance-programme/#respond Wed, 15 Jul 2026 14:16:55 +0000 https://thethavamanitimes.com/?p=2766 THE THAVAMANI TIMES 

 திருவண்ணாமலை மாவட்டம்

இதயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் TNPSC அறிமுக மற்றும் வழிகாட்டல் நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த புதுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள இதயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவிகளின் அரசு வேலைவாய்ப்பு கனவை நனவாக்கும் நோக்கில் TNPSC அறிமுக மற்றும் வழிகாட்டல் நிகழ்ச்சி இன்று (15.07.2026) சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலர் அருட்சகோதரி சம்பூர்ண மேரி தலைமையில், சிறப்பு அழைப்பாளர்களாக திரு. ஜீவரத்தினம் (TNPSC-SME, சென்னை), திரு. வசந்தகுமார் (TNPSC-SAM, சென்னை), திரு. சையத் பிலால் (Franchise Head, Veranda Race, திருவண்ணாமலை), செல்வி. சந்தோஷினி (Branch Manager, திருவண்ணாமலை) ஆகியோர் கலந்து கொண்டனர். குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த அவர்கள், மாணவிகள் அரசு பணிகளில் அதிக அளவில் பங்கேற்று சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வழிகாட்டல் அமர்வில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-1, குரூப்-2, குரூப்-2A, குரூப்-4, ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், காவல்துறை, வங்கித் துறை, ரயில்வே, இன்சூரன்ஸ் மற்றும் மத்திய அரசுத் துறை வேலைவாய்ப்புகள் தொடர்பான போட்டித் தேர்வுகள், அவற்றுக்கான தகுதிகள், தேர்வு முறை, பாடத்திட்டம் மற்றும் தயாரிப்பு வழிமுறைகள் குறித்து மாணவிகளுக்கு தெளிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

சிறப்பு அழைப்பாளர்களான திரு. ஜீவரத்தினம் மற்றும் திரு. வசந்தகுமார் ஆகியோர், அரசு வேலைவாய்ப்பை இலக்காகக் கொண்டு திட்டமிட்டு தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் என்பதை எடுத்துரைத்தனர். தினசரி செய்தித்தாள் வாசிப்பு, பொது அறிவு வளர்த்தல், முந்தைய ஆண்டுத் தேர்வு வினாத்தாள்களைப் பயிற்சி செய்தல், நேர மேலாண்மை மற்றும் தன்னம்பிக்கையுடன் தயாராகுதல் போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பயனுள்ள ஆலோசனைகளை வழங்கினர்.

மேலும், Veranda Race நிறுவனத்தின் சார்பில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி, வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு தகவல்களும் மாணவிகளிடம் பகிரப்பட்டன.

நிகழ்ச்சியின் நிறைவில் கல்லூரியின் செயலர் அருட்சகோதரி சம்பூர்ண மேரி, மாணவிகள் உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்து விடாமுயற்சியுடன் உழைத்து அரசு பணிகளில் சாதனை படைக்க வேண்டும் என்று வாழ்த்தி சிறப்புரையாற்றினார். பின்னர் மாணவிகளின் சந்தேகங்களுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் விளக்கமளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். TNPSC மற்றும் பிற போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய இந்நிகழ்ச்சி மாணவிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

]]>
https://thethavamanitimes.com/district-news/idhaya-womens-arts-and-science-college-tnpsc-introduction-and-guidance-programme/feed/ 0
பயிர் கடன் தள்ளுபடி – கூட்டுறவு கடன் சங்கத்தில் மனு அளித்த உழவர் உரிமை இயக்கம் https://thethavamanitimes.com/district-news/crop-loan-waiver-petition-submitted-by-the-farmers-rights-movement-at-the-cooperative-credit-society/ https://thethavamanitimes.com/district-news/crop-loan-waiver-petition-submitted-by-the-farmers-rights-movement-at-the-cooperative-credit-society/#respond Wed, 15 Jul 2026 13:56:10 +0000 https://thethavamanitimes.com/?p=2763 THE THAVAMANI TIMES,

திருவண்ணாமலை மாவட்டம்

பயிர் கடன் தள்ளுபடி கோரி மேல்புழுதியூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் மனு அளித்த உழவர் உரிமை இயக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள மேல்புழுதியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், பயிர் கடன் தள்ளுபடி கோரி உழவர் உரிமை இயக்கம் சார்பில் புதன்கிழமை (15.07.2026) மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

உழவர் உரிமை இயக்கத்தின் மாநில தலைவர் குண்டாஸ் விவசாயி அருள் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

போராட்டத்தின் போது, தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகள் பெற்றுள்ள பயிர் கடன்களை அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், ஏற்கனவே பயிர் கடன் பெற்றுள்ள விவசாயிகளை கடனை உடனடியாக திருப்பிச் செலுத்துமாறு நிர்பந்திக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர், மேல்புழுதியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் செல்வராஜ் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. மனுவைப் பெற்றுக்கொண்ட செயலாளர், விவசாயிகளின் கோரிக்கையை மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார்.

மேலும், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, கூட்டுறவு வங்கிகளில் ஐந்து ஏக்கருக்குள் நிலம் வைத்துள்ள விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களை முழுமையாகவும், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களில் 50 சதவீதத்தை தள்ளுபடி செய்யவும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உழவர் உரிமை இயக்கத்தினர் வலியுறுத்தினர்.

போராட்டம் முழுவதும் விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன், மனு அளிக்கும் நிகழ்வு அமைதியான முறையில் நிறைவடைந்தது.

]]>
https://thethavamanitimes.com/district-news/crop-loan-waiver-petition-submitted-by-the-farmers-rights-movement-at-the-cooperative-credit-society/feed/ 0
தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் https://thethavamanitimes.com/district-news/state-executive-committee-meeting-of-the-tamil-nadu-physical-education-teachers-and-physical-education-directors-association/ https://thethavamanitimes.com/district-news/state-executive-committee-meeting-of-the-tamil-nadu-physical-education-teachers-and-physical-education-directors-association/#respond Sun, 12 Jul 2026 07:56:46 +0000 https://thethavamanitimes.com/?p=2750 The Thavamani Times,

திருவண்ணாமலை | 12.07.2026

தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது

தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் திருவண்ணாமலை நகரில் உள்ள ஏ.எஸ்.எம். கிராண்ட் ஹோட்டலில்  மாநிலத் தலைவர் எஸ். சங்கரபெருமாள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் மா.கு. சதீஷ், மாநில பொருளாளர் என். சுரேஷ்குமார், மாநில செயல் தலைவர் எஸ். செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டு சங்கத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர்.

கூட்டத்தில் கடந்த ஆண்டின் செயல்பாடுகள், வரவு-செலவு கணக்குகள், உறுப்பினர் சேர்க்கை விரிவாக்கம், மாவட்ட அளவிலான சங்க செயல்பாடுகளை வலுப்படுத்துதல், அரசு பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், உடற்கல்வி ஆசிரியர்களின் பதவி உயர்வு, பணிமாறுதல், பணிநிரந்தரம், விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், பள்ளி மாணவர்களின் உடற்திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களின் நலன், மாணவர்களிடையே விளையாட்டு திறனை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் சங்கத்தின் அடுத்தகட்ட பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தின் நிறைவில், மாநிலத் தலைவர் எஸ். சங்கரபெருமாள் அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்து, சங்கத்தின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றுவதற்கான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.

]]>
https://thethavamanitimes.com/district-news/state-executive-committee-meeting-of-the-tamil-nadu-physical-education-teachers-and-physical-education-directors-association/feed/ 0
இதயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் நிறைவு https://thethavamanitimes.com/district-news/valedictory-of-placement-training-camp-for-the-students-of-idhaya-college-of-arts-and-science-for-women/ https://thethavamanitimes.com/district-news/valedictory-of-placement-training-camp-for-the-students-of-idhaya-college-of-arts-and-science-for-women/#respond Fri, 10 Jul 2026 15:30:39 +0000 https://thethavamanitimes.com/?p=2746 செங்கம் அடுத்த புதுபாளையத்தில் அமைந்துள்ள இதயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இறுதியாண்டு மாணவிகளின் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்தும் நோக்கில் 06.07.2026 முதல் 10.07.2026 வரை ஐந்து நாட்கள் தொடர்ந்து வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற்றது.

இப்பயிற்சி முகாமை கல்லூரியின் செயலர் அருட்சகோதரி சம்பூர்ண மேரி, முதல்வர் அருட்சகோதரி முனைவர் லூர்து மேரி, நிர்வாக அலுவலர் அருட்சகோதரி சந்தன மேரி ஆகியோர் முன்னிலை வகித்து ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை நகரைச் சேர்ந்த ஆளுமை மேம்பாட்டு பயிற்சியாளர் பவதாரிணி, ஆளுமைத் திறன் பயிற்சியாளர் சௌந்தர்யா, மென்மைத் திறன் (Soft Skills) பயிற்சியாளர் சத்ய பிரியா ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்தனர்.

முகாமில் பங்கேற்ற இறுதியாண்டு மாணவிகள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் செய்முறை மற்றும் கலந்துரையாடல் முறையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஆங்கிலத் தொடர்புத் திறனை மேம்படுத்துதல், பொதுவாக ஆங்கிலத்தில் தன்னம்பிக்கையுடன் பேசும் திறன், குழு விவாதத்தில் (Group Discussion) திறம்பட பங்கேற்பது, வேலைவாய்ப்பு நேர்காணலை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வது, சிறந்த விண்ணப்ப விவரக் குறிப்பு (Resume) தயாரித்தல், தொழில்முறை நடத்தை, நேர மேலாண்மை, தகவல் பரிமாற்றத் திறன், தலைமைப் பண்பு, குழு ஒருங்கிணைப்பு, பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விரிவான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

வளாகத் தேர்வுகள் (Campus Placement) மற்றும் பிற தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான உத்திகள், நேர்காணலில் கவனிக்க வேண்டிய அம்சங்கள், நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளும் வழிமுறைகள் ஆகியவற்றை பயிற்சியாளர்கள் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினர். மாணவிகள் தங்களது சந்தேகங்களுக்கு நேரடியாக விளக்கம் பெற்றதுடன், செயல்முறைப் பயிற்சிகளிலும் உற்சாகமாக பங்கேற்றனர்.

ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் தினமும் வழங்கப்பட்ட செயல்பாடுகள், குழு விளையாட்டுகள், கலந்துரையாடல்கள் மற்றும் பயிற்சி அமர்வுகளில் மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் பங்கேற்று தங்களது வேலைவாய்ப்பு திறன்களை மேம்படுத்திக் கொண்டனர்.

நிகழ்வின் இறுதி நாளில் கல்லூரியின் செயலர் அருட்சகோதரி சம்பூர்ண மேரி மற்றும் முதல்வர் அருட்சகோதரி முனைவர் லூர்து மேரி ஆகியோர் மாணவிகளை பாராட்டி, அவர்கள் எதிர்காலத்தில் சிறந்த நிறுவனங்களில் பணியாற்றி உயரிய நிலையை அடைய வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும், இத்தகைய வேலைவாய்ப்பு பயிற்சிகள் மாணவர்களின் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் என்பதையும் வலியுறுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் இறுதியாண்டு மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

]]>
https://thethavamanitimes.com/district-news/valedictory-of-placement-training-camp-for-the-students-of-idhaya-college-of-arts-and-science-for-women/feed/ 0
மழைக்கால தொற்றுநோய்களைத் தடுக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: https://thethavamanitimes.com/district-news/all-departments-must-work-together-to-prevent-monsoon-diseases/ https://thethavamanitimes.com/district-news/all-departments-must-work-together-to-prevent-monsoon-diseases/#respond Thu, 09 Jul 2026 16:16:38 +0000 https://thethavamanitimes.com/?p=2742 The Thavamani Times 

திருவண்ணாமலை மாவட்ட சுகாதார அலுவலரின் உத்தரவின்படி, மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய தொற்றுநோய்களைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் நோக்கில், செங்கம் வட்டாரத்திற்குட்பட்ட மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மேல்பள்ளிப்பட்டியில் இன்று (09.07.2026) அனைத்து துறைகளும் பங்கேற்ற ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் மரிய தேவ ஆனந்த் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சிலம்பரசன் முன்னிலை வகித்தார். மாவட்ட கொள்ளைநோய் நிபுணர் டாக்டர் நிஷாந்த், மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக உதவியாளர் மற்றும் வருவாய், ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி, கல்வி, காவல், கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் பொதுவாக அதிகரிக்கும் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா, வயிற்றுப்போக்கு, டைபாய்டு, லெப்டோஸ்பைரோசிஸ் உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

குறிப்பாக, குடிநீர் பாதுகாப்பை உறுதி செய்தல், மேல்நிலைத் தொட்டிகள் மற்றும் குடிநீர் ஆதாரங்களை முறையாக சுத்தம் செய்தல், குளோரினேஷன் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளுதல், மழைநீர் தேங்கும் இடங்களை உடனடியாக அகற்றுதல், கொசு உற்பத்தி மையங்களை கண்டறிந்து ஒழித்தல், புகைமருந்து தெளித்தல் மற்றும் லார்வா ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல் ஆகியவை குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல் அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளை தொடர்ந்து கண்காணித்து, தேவையான ரத்தப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை தாமதமின்றி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. காய்ச்சல் பாதிப்பு அதிகம் காணப்படும் பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தி, வீடு தோறும் களப்பணியாளர்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

நாய் கடி சம்பவங்கள் அதிகரிக்காத வகையில் தெருநாய்கள் தொடர்பான கண்காணிப்பு, கடிபட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை மற்றும் தடுப்பூசி வழங்குதல், பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் தூய்மைப் பணிகளை தீவிரப்படுத்தி, சுற்றுப்புறச் சுகாதாரத்தை பேணுவதன் அவசியம் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடித்தல், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருத்தல், காய்ச்சல் அல்லது உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகுதல் போன்ற விழிப்புணர்வு தகவல்களை விரிவாக எடுத்துரைக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மழைக்காலத்தில் தொற்றுநோய்கள் பரவுவதை முழுமையாகக் கட்டுப்படுத்த அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

]]>
https://thethavamanitimes.com/district-news/all-departments-must-work-together-to-prevent-monsoon-diseases/feed/ 0