இந்தியா – The Thavamani Times https://thethavamanitimes.com Wed, 08 Jul 2026 15:42:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.3 https://thethavamanitimes.com/wp-content/uploads/2026/06/cropped-7ec2082f-6e71-49d3-bef0-3dd3de5b543a-32x32.png இந்தியா – The Thavamani Times https://thethavamanitimes.com 32 32 இளம் ரசிகனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய பவன் கல்யாண் – அரிய மரபணு நோயால் போராடிய நிரஞ்சன் உயிரிழப்பு https://thethavamanitimes.com/national/pawan-kalyan-fulfills-the-last-wish-of-a-young-fan/ https://thethavamanitimes.com/national/pawan-kalyan-fulfills-the-last-wish-of-a-young-fan/#respond Wed, 08 Jul 2026 15:42:22 +0000 https://thethavamanitimes.com/?p=2733 The Thavamani Times, Published   08 July 2026,

ஹனுமகொண்டா, ஆந்திரப் பிரதேசம்

ஆந்திரப் பிரதேசத்தின் ஹனுமகொண்டாவைச் சேர்ந்த 17 வயதான நிரஞ்சன் (அன்பாக “கப்பர் சிங்” என்று அழைக்கப்பட்டவர்), நடிகரும் ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாணின் தீவிர ரசிகராக இருந்தார். சிறு வயதிலிருந்தே பவன் கல்யாணின் திரைப்படங்கள், பேச்சுகள் மற்றும் பொதுச்சேவையால் ஈர்க்கப்பட்டிருந்த நிரஞ்சன், அரிய மரபணு நோயான டுசென் மஸ்குலர் டிஸ்ட்ரோபி (Duchenne Muscular Dystrophy – DMD) காரணமாக கடந்த சில ஆண்டுகளாக படுக்கையிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.

உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தபோதிலும், தனது வாழ்நாளில் ஒருமுறையாவது பவன் கல்யாணை நேரில் சந்திக்க வேண்டும் என்பதே நிரஞ்சனின் மிகப்பெரிய கனவாக இருந்தது. இந்த விருப்பம் ஜனசேனா கட்சி நிர்வாகிகள் மூலம் பவன் கல்யாணின் கவனத்திற்கு சென்றது.

 

இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் பவன் கல்யாண் நேரடியாக ஹனுமகொண்டாவில் உள்ள நிரஞ்சனின் இல்லத்திற்குச் சென்று அவரை சந்தித்தார். அந்த சந்திப்பின்போது, நிரஞ்சனுடன் நீண்ட நேரம் உரையாடிய அவர், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும், உடனடி மருத்துவ உதவிக்காக ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியதுடன், நிரஞ்சன் விரும்பிய செல்ல நாயையும், ஒரு டேப்லெட்டையும் பரிசாக வழங்கினார். திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் பிரசாதத்தையும் அளித்து, அவரது உடல்நலம் குணமடைய பிரார்த்தனை செய்தார்.

அந்த சந்திப்பு சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது. கடுமையான நோயால் வாடிக்கொண்டிருந்த நிரஞ்சனின் முகத்தில் அப்போது மலர்ந்த புன்னகை, பலரது மனதையும் நெகிழச் செய்தது.

இந்நிலையில், தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிரஞ்சன், சிகிச்சை பலனின்றி ஜூலை 8 அன்று உயிரிழந்தார். இந்த துயரச் செய்தி ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிரஞ்சனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த பவன் கல்யாண், தனது சமூக வலைதள பதிவில், “கடுமையான நோயுடன் போராடியபோதும் உன் முகத்தில் இருந்த புன்னகை என்றும் என் மனதில் நிலைத்திருக்கும். உன் தைரியமும் மனவலிமையும் அனைவருக்கும் ஒரு உத்வேகமாக இருக்கும். இறைவன் உன் ஆன்மாவிற்கு சாந்தியளிக்கட்டும்; குடும்பத்தினருக்கு இந்த துயரத்தை தாங்கும் மனவலிமையை வழங்கட்டும்” என்று உருக்கமாக குறிப்பிட்டார்.

 

நிரஞ்சனின் மறைவுக்கு பவன் கல்யாண் ரசிகர்கள், ஜனசேனா கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் சோனு சூடும் நிரஞ்சனின் பெற்றோரிடம் காணொலி அழைப்பின் மூலம் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

ஒரு ரசிகனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய பவன் கல்யாணின் மனிதநேயம், நிரஞ்சனின் மறைவுக்குப் பின்னரும் பலரது மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

]]>
https://thethavamanitimes.com/national/pawan-kalyan-fulfills-the-last-wish-of-a-young-fan/feed/ 0
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஆந்திர துணை முதல்வர்  https://thethavamanitimes.com/national/andhra-pradesh-deputy-chief-minister-offered-prayers-at-the-tirupati-lord-venkateswara-temple-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%8f%e0%ae%b4/ https://thethavamanitimes.com/national/andhra-pradesh-deputy-chief-minister-offered-prayers-at-the-tirupati-lord-venkateswara-temple-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%8f%e0%ae%b4/#respond Thu, 02 Jul 2026 14:45:27 +0000 https://thethavamanitimes.com/?p=2700 The Thavamani Times, Published On 02 July 2026, 8.00 pm

திருப்பதி | 02.07.2026

Pawan Kalyan இன்று அதிகாலை Tirumala Venkateswara Temple-ல் எழுந்தருளியுள்ள ஏழுமலையான் சுவாமியை தரிசனம் செய்து சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றார்.

கோவிலுக்கு வருகை தந்த அவரை Tirumala Tirupati Devasthanams அதிகாரிகள் பாரம்பரிய பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்றனர். பின்னர், கோவில் மரபுப்படி சாமி தரிசனம் செய்த பவன் கல்யாண், நாட்டின் அமைதி, மக்கள் நலன் மற்றும் வளமான எதிர்காலத்திற்காக பிரார்த்தனை செய்தார்.

தரிசனத்திற்குப் பிறகு வேத பண்டிதர்கள் வேத ஆசீர்வாதம் வழங்கினர். தொடர்ந்து, தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு தீர்த்தப் பிரசாதம், லட்டு பிரசாதம் மற்றும் கோவில் நினைவுப் பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.

பவன் கல்யாணின் வருகையை முன்னிட்டு திருமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. பக்தர்களின் தரிசனத்திற்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் காவல்துறை மற்றும் தேவஸ்தான நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.

தரிசனத்தைத் தொடர்ந்து, கோவில் வளாகத்தில் இருந்த பக்தர்கள் பலர் பவன் கல்யாணை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன், அவருடன் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.

]]>
https://thethavamanitimes.com/national/andhra-pradesh-deputy-chief-minister-offered-prayers-at-the-tirupati-lord-venkateswara-temple-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%8f%e0%ae%b4/feed/ 0
காந்திப் பெயரே வேண்டும் – முதலமைச்சர் விஜய் பிரதமருக்கு கடிதம்! https://thethavamanitimes.com/tamilanadu/gandhis-name-itself-is-needed-chief-minister-vijays-letter-to-the-prime-minister/ https://thethavamanitimes.com/tamilanadu/gandhis-name-itself-is-needed-chief-minister-vijays-letter-to-the-prime-minister/#respond Thu, 02 Jul 2026 11:50:31 +0000 https://thethavamanitimes.com/?p=2683 The Thavamani Times, Published On 02 July 2026 at 05.18 pm,

விபி-ஜி ராம்ஜி திட்டத்தின் முழு நிர்வாக செலவினையும் மத்திய அரசே ஏற்கவேண்டும் என முதலமைச்சர் விஜய் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில்,

‘விக்சித் பாரத் – ரோஜ்கார் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமிண்) [VB-GRAMG]’ திட்டத்தின் செயலாக்கம் 01.07.2026 முதல் தொடங்க திட்டமிட்டுள்ளது தொடர்பாக தாம் இந்த கடிதத்தை எழுதுவதாக தெரிவித்து,

இப்புதிய திட்டத்தின் நிதிப்பகிர்வு முறை மற்றும் செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள், மாநில அரசுக்கு 5,000 கோடிரூபாய்க்கும் அதிகமாக கூடுதல் நிதிச் சுமையையும், செயல்பாட்டு ரீதியான தாக்கங்களையும் ஏற்படுத்துமெனினும், ‘VBGRAMG சட்டம், 2025’-இன் சில விதிகளில் முக்கிய மாற்றங்களும் தளர்வுகளும் அவசியமாகிறது.

அவ்வாறு செய்யாவிடில், இத்திட்டத்தை கள அளவில் தடையின்றியும் திறம்படவும் செயல்படுத்துவது பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தைச் சார்ந்துள்ள கிராமப்புற மக்களையும் இது கடுமையாகப் பாதிக்கும் என்று தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நிதிப்பகிர்வு முறையைப் பொறுத்தவரை, தற்போதைய வழிகாட்டுதல்களின்படி ஊதியம், கட்டுமானப் பொருட்கள் மற்றும் நிர்வாகச் செலவுகள் ஆகிய அனைத்திற்கும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே 60:40 என்ற வீதத்தைக் கட்டாயமாக்குகின்றன என்றும்,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கடந்த இரண்டு தசாப்தங்களாக வேறுபட்ட ஒரு கட்டமைப்பின் கீழ் செயல்பட்டு வந்த நிலையில், இந்த திடீர் மாற்றம் மாநில கருவூலத்திற்குப் பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாக ஊதியம் மற்றும் வேலை நாட்கள் குறைய வாய்ப்புள்ளதுடன் பிற அத்தியாவசிய நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறையக்கூடும். எனவே, ஊதிய மற்றும் நிர்வாகச் செலவுகளைப் பொறுத்தவரையில் ஒன்றிய அரசின் 100% நிதியுதவியைத் தொடரவேண்டும் என்றும்,

கட்டுமானப் பொருட்கள் கூறுகளை ஒன்றிய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே 75:25 என்ற வீதத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தாம் கேட்டுக்கொள்வதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இத்திட்டத்தில் கிராம ஊராட்சிகளை வகைப்படுத்துவதற்கும், மாநில அளவிலான நிதி ஒதுக்கீட்டைப் பகிர்ந்தளிப்பதற்கும் முன்மொழியப்பட்டுள்ள ஒன்றிய அளவிலான வழிமுறைகளில், மிக நுட்பமான நிர்வாக மேலாண்மையினைக் கொண்டுவருவதுடன் நாடு முழுமைக்கும் ஒரேமாதிரியான கணக்கீடு அடிப்படையிலான அணுகுமுறை என்பது தொடர்புடைய மாநிலத்தின் சமூகப் பொருளாதாரப் பன்முகத்தன்மையைக் கணக்கில் கொள்ளத் தவறுவதுடன்,

அடிமட்ட அளவில் சமச்சீரற்ற நிதியொதுக்கீட்டிற்கு வழிவகுக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தும் என்பதால் உள்ளூர் மற்றும் கள அளவிலான தேவைகளின் அடிப்படையில், மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வுக்கென தனிப்பட்ட வழிமுறையை உருவாக்க மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் முக்கிய வேளாண் பருவங்களை அறிவிப்பதிலும், கள அளவில் கூடுதல் நெகிழ்வுத்தன்மை தேவைப்படுவதால் இச்சட்டம், ஒவ்வொரு நிதியாண்டிலும் முதன்மை விதைப்பு மற்றும் அறுவடைக் காலங்களை உள்ளடக்கிய 60 நாட்களை மாநில அரசு நிலையானதாக அறிவிக்க வேண்டும் என்றும்,

அக்காலகட்டத்தில் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் கட்டாயமாக்குவதை சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், ‘எல் நினோ’ போன்ற கணிக்க இயலாத காலநிலை மாற்றங்கள், விவசாயக் கால அட்டவணையை அடிக்கடி மாற்றும் தன்மையுடையதாய் உள்ளதால், எதிர்பாராத காலங்களில் தொழிலாளர் தேவையை ஏற்படுத்துவதுடன் முன்பே அறிவிக்கப்பட்ட முதன்மைப் பருவங்களின்போது வாழ்வாதாரத்திற்கான வேலைவாய்ப்பின் அவசியத்தை ஏற்படுத்தும் என்பதால்,

கால அட்டவணையை முன்னரே அறிவிப்பதற்குப் பதிலாக, உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப இந்த 60 நாட்கள் முதன்மைப் பருவத்தை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே மாற்றி அறிவிப்பதற்கான அதிகாரத்தைப் பரவலாக்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இத்திட்டத்தில், மாநில வீட்டுவசதித் திட்டங்களுக்கு ஊதிய வேலைவாய்ப்பை நீட்டிப்பது ஒரு முக்கிய முன்னுரிமையாக அமைந்துள்ளது என்றும், இச்சட்டம் ஒன்றிய அரசின் ஊரக வீட்டுவசதித் திட்டங்களுடன் ஒருங்கிணைக்க அனுமதிக்கும் அதே வேளையில், மாநில அரசின் நிதியுதவியுடன் செயல்படும் வீட்டுவசதித் திட்டங்களை விலக்கி வைப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பின்தங்கிய கிராமப்புற மற்றும் பழங்குடியின சமூகங்கள் கண்ணியத்துடன் வாழ்வதை நோக்கமாகக் கொண்டு, அனைவருக்கும் வீடு என்பதை தமிழ்நாடு அரசு ஒரு முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளதால், VB-GRAMG கட்டமைப்பின் கீழ் மாநில வீட்டுவசதித் திட்டங்களையும் சேர்த்து,

இந்நலத்திட்ட இலக்குகளை கணிசமாக விரைவுபடுத்தி, அனைவருக்கும் வீடு கிடைப்பதை உறுதி செய்ய உதவிடுமாறும் பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், பணிகளை உரிய காலத்தில் செயல்படுத்துவதற்கு திட்டங்களுக்கான ஒருங்கிணைந்த ஒப்புதல்களைப் பரவலாக்குவது அவசியமானதென்றும், இச்சட்டத்தின்படி, ஒருங்கிணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஒன்றிய, மாநில அல்லது உள்ளூர் திட்டங்களும் ஒன்றிய அரசால் தனித்தனியாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும்,

திட்ட ஒருங்கிணைப்பு வாய்ப்புகள், உள்ளாட்சி அமைப்புகளின் மாறிவரும் நிதி நிலைமை மற்றும் மாநில அரசின் புதிய முன்முயற்சிகளைப் பொறுத்து அமைவதால், இத்தகைய தனித்தனி அறிவிப்புகள் நிர்வாகத் தாமதங்களை உருவாக்கும் என்பதால் ஒன்றிய அரசுக்குத் தகவல் தெரிவித்து,

திட்டங்களை ஒருங்கிணைக்கும் அறிவிப்பு மற்றும் ஒப்புதல் அளிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கே வழங்குவது, மிகவும் பயனுள்ளதாகவும் திட்டச் செயலாக்கத்தை உறுதி செய்யவும் ஏதுவாக அமையும் என்று முதலமைச்சர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, மகாத்மா காந்தியின் மாண்பைப் போற்றும் வகையிலும், இத்திட்டத்தின் மீது பொதுமக்கள் கொண்டுள்ள நன்மதிப்பை மேலும் உயர்த்தும் வகையிலும் இத்திட்டத்தை மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழ்நாடு தொடர்ந்து தேசிய அளவில் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது என்றும், இந்த முக்கிய மாற்றங்களுடன்,

இத்திட்டத்தை மேலும் சிறப்பாக தொலைநோக்குடன், அதிகளவு உள்ளூர் மக்கள் பயன்பெறும் வகையிலும், கிராமப்புற மேம்பாட்டில் தீவிரக் கவனத்துடனும் செயல்படுத்த முடியும் என்று குறிப்பிட்டு, இந்த முன்மொழிவுகளை இந்தியப் பிரதமர் கனிவுடன் பரிசீலிக்க வேண்டுமென்று தான் எதிர்பார்ப்பதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

]]>
https://thethavamanitimes.com/tamilanadu/gandhis-name-itself-is-needed-chief-minister-vijays-letter-to-the-prime-minister/feed/ 0
சிலிண்டர் விலை ரூ.172.50 குறைந்தது https://thethavamanitimes.com/uncategorized/cylinder-price-reduced-by-rs-172-50/ https://thethavamanitimes.com/uncategorized/cylinder-price-reduced-by-rs-172-50/#respond Wed, 01 Jul 2026 02:15:14 +0000 https://thethavamanitimes.com/?p=2666 The Thavamani Times, 01 July 2026,

கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை இன்று அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலை மாற்றத்தை அறிவித்துள்ளன.

19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.172.50 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பின் மூலம், சென்னையில் ரூ.3,283 ஆக இருந்த வணிக சிலிண்டரின் விலை தற்போது ரூ.3,106 ஆகக் குறைந்துள்ளது.

மேற்கு ஆசியாவில் நிலவிய உலகளாவிய எரிசக்தி விநியோகத் தட்டுப்பாடு மற்றும் போர் பதற்றங்கள் காரணமாக, கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6 மாதங்களில் வணிக சிலிண்டரின் விலை கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்து ரூ.3,283-ஐ எட்டியிருந்தது. தற்போதைய பதற்ற தணிவுக்குப் பிறகு, இந்த ஆண்டின் முதல் முக்கிய விலை குறைப்பாக இது பார்க்கப்படுகிறது.

பொதுமக்கள் பயன்படுத்தும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இன்றி, அது ரூ.957.50 என்ற பழைய விலையிலேயே நீடிக்கிறது.

இந்த விலை குறைப்பு உணவகங்கள், தேநீர் கடைகள் மற்றும் சிறு வணிகர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. எனினும், இதன் காரணமாக ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை குறையுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

]]>
https://thethavamanitimes.com/uncategorized/cylinder-price-reduced-by-rs-172-50/feed/ 0
திருப்பதியில் வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம் https://thethavamanitimes.com/national/unprecedented-rush-of-devotees-in-tirupati/ https://thethavamanitimes.com/national/unprecedented-rush-of-devotees-in-tirupati/#respond Sun, 28 Jun 2026 08:41:45 +0000 https://thethavamanitimes.com/?p=2589 The Thavamani Times, Published in 28 June 2026,

  1.  திருப்பதி ஜூன் 28,

திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வரலாறு காணாத அளவு பக்தர்கள் கூட்டம் குவிந்து உள்ளது. 3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக தரிசனத்திற்காக அதிக அளவு பக்தர்கள் வந்துள்ளனர். வைகுந்தம் தங்கும் அறைகள் மற்றும் நாராயணகிரி கொட்டைகள் முழுவதும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர்.

இதனால் தரிசன வரிசையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள பச்சி கல்வ கங்கம்மா கோவில் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர்.

கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு பலத்த பாதுகாப்புடன் பக்தர்கள் கட்டம், கட்டமாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். வரலாறு காணாத அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வந்ததால் அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் உணவு, குடிநீர், டீ, பால் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களின் உடல்நிலை பாதிக்கபட்டால் சிகிச்சை அளிப்பதற்காக ஆங்காங்கே நடமாடும் மருத்துவ வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சாதாரண பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்வதற்காக இன்றும், நாளையும் வி.ஐ.பி பிரேக் தரிசனம் மற்றும் பரிந்துரை கடிதங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் ஆன்லைனில் வழங்கப்படும் ஸ்ரீ வாணி அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டு வந்த 800 டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதி விமான நிலையத்தில் வழங்கப்பட்டு வரும் 200 ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் தொடர்ந்து வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பதியில் நேற்று 85,582 பேர் தரிசனம் செய்தனர். 44, 155 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி னர். ரூ.3.76 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.4.66 லட்சம் லட்டுக்கள் விற்பனை யானது.நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 30 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

]]>
https://thethavamanitimes.com/national/unprecedented-rush-of-devotees-in-tirupati/feed/ 0
பாரத் டாக்ஸி’ சேவை – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். https://thethavamanitimes.com/national/union-home-minister-amit-shah-launched-the-bharat-taxi-service/ https://thethavamanitimes.com/national/union-home-minister-amit-shah-launched-the-bharat-taxi-service/#respond Sat, 27 Jun 2026 10:34:26 +0000 https://thethavamanitimes.com/?p=2572 The ThavamaniTimes, Published on June27,

குஜராத் ஜூன் 27: பாரத் டாக்ஸி’ சேவை குஜராத்தில் தொடக்கம்:

இந்தியாவில் கூட்டுறவு நிறுவனத்தால் நடத்தப்படும் ஓட்டுநர்களுக்கு சொந்தமான முதல் முன்பதிவு சேவையான ‘பாரத் டாக்ஸி’யை இன்று குஜராத்தில் உள்ள 14 முக்கிய நகரங்களில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.

இந்த முயற்சி ஓட்டுநர்களை தற்காலிக பணியாளர்களாக கருதாமல், அவர்களை பங்குதாரர்களாக நிலை நிறுத்துகிறது.

இதன்மூலம் 20 முதல் 30 சதவீதம் வரை கமிஷன் எடுத்துக்கொள்ளும் தனியார் நிறுவனம் போல் அல்லாமல், ஓட்டுநர்கள் தங்கள் பயண வருமானத்தில் 100 சதவீதத்தையும் தாங்களே எடுத்துக்கொண்டு பயன்பெறுகிறார்கள்.

பாரத் டாக்சி சேவை குறித்து அமித் ஷா பெருமிதம்:

இந்த தொடக்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியபோது, “இந்தியாவின் போக்குவரத்துத் துறையில் இன்று ஒரு மிக முக்கியமான நாள். ஏனென்றால், இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளதால் டாக்சிகளுக்கான தேவை பொதுவானதாகி விட்டது.

ஒவ்வொரு வீட்டையும் டாக்சிகளுக்கான தேவை சென்றடைந்துள்ளது. தனியார் துறையின் டாக்சி சேவைகளில் பல்வேறு பிரச்சனைகள் உருவாகி வந்தன. ஓட்டுநர்களும் பொதுமக்களும் தங்களது பிரச்சனைகளை தீர்க்கும்படி நம்பிக்கையுடன் என்னை சந்தித்தனர்.

ஆரம்பத்தில் அரசு ஒரு புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது, ஆனால் வெறும் சட்டத்தால் எந்தவொரு பிரச்சனைக்கும் 100 சதவீதம் தீர்வு கிடைக்காது.

அதன்பிறகு கூட்டுறவு மாதிரியில் ஒரு டாக்சி சேவை தொடங்கப்பட்டால் சுரண்டல் அடிப்படையிலான வணிகம் தானாகவே முடிவுக்கு வரத்தொடங்கும் என்ற எண்ணம் எழுந்தது” என்று அவர் கூறினார்.

]]>
https://thethavamanitimes.com/national/union-home-minister-amit-shah-launched-the-bharat-taxi-service/feed/ 0
போலீஸை பார்த்து சிரித்த குழந்தையின் புன்னகை வைரல்! https://thethavamanitimes.com/national/the-smile-of-the-baby-who-laughed-at-the-police-goes-viral/ https://thethavamanitimes.com/national/the-smile-of-the-baby-who-laughed-at-the-police-goes-viral/#respond Sat, 27 Jun 2026 05:46:25 +0000 https://thethavamanitimes.com/?p=2538 The Thavamani Times, 

Published on June27,Hyderabad:

ஹைதராபாத் : வழியோரத்தில் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 7 மாத குழந்தை கடத்தப்பட்டது… சில மணி நேரங்களில் மீட்ட போலீஸ்; போலீஸை பார்த்து சிரித்த குழந்தையின் புன்னகை வைரல்!

வழியோரத்தில் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது காணாமல் போன 7 மாத குழந்தையை, சில மணி நேரங்களிலேயே ஹைதராபாத் நாம்பள்ளி போலீசார் மீட்டனர். கடத்தப்பட்ட குழந்தையை மீட்டதோடு, குழந்தையை கையில் தூக்கிய போலீஸ் அதிகாரியைப் பார்த்து அது புன்னகைத்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடந்தது என்ன?

கடந்த நள்ளிரவில், ஹுமேரா பேகம் என்ற பெண் கண்ணீருடன் நாம்பள்ளி காவல் நிலையத்துக்கு வந்து, தன்னுடன் சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த 7 மாத குழந்தை ஃபைசான் காணாமல் போய்விட்டதாக புகார் அளித்தார். உடனடியாக போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

சிசிடிவி காட்சிகள் துப்புத் தந்தன

அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், இரண்டு பேர் குழந்தையை கடத்திச் செல்லும் காட்சியை கண்டுபிடித்தனர். சில மணி நேரங்களிலேயே முகமது முஷ்தாக் மற்றும் முகமது யூசுப் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

விசாரணையில், முகமது முஷ்தாகின் உறவினரான கௌஸ் என்பவருக்காகவே குழந்தையை கடத்தியதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். ஆனால் அவர் குழந்தையை ஏற்க மறுத்ததால், வேறொருவருக்கு விற்க முயன்றபோதே அவர்கள் போலீசாரிடம் சிக்கினர்.

வைரலான அந்த தருணம்

போலீசார் மீட்டபோது ஃபைசான் உரக்க அழுதுகொண்டிருந்தான். ஆனால், இன்ஸ்பெக்டர் சஞ்சய் குமார் குழந்தையை கையில் தூக்கியவுடன் அது அமைதியானது. தாம் பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்த குழந்தை, இன்ஸ்பெக்டரின் முகத்தை பார்த்து பற்களே இல்லாத புன்னகையுடன் சிரித்தது. அந்த நெகிழ்ச்சியான காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

“என் வாழ்க்கையில் ஒருபோதும் மறக்க முடியாத புன்னகை அது,” என்று இன்ஸ்பெக்டர் சஞ்சய் குமார் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

அவசரமான நேரத்தில் ஏழைத் தாயின் கண்ணீரை அலட்சியப்படுத்தாமல், விரைந்து செயல்பட்டு குழந்தையை பாதுகாப்பாக மீட்ட நாம்பள்ளி போலீசாருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

]]>
https://thethavamanitimes.com/national/the-smile-of-the-baby-who-laughed-at-the-police-goes-viral/feed/ 0
புதுச்சேரி கலங்கரை விளக்கத்தை திறந்துவைத்தார் – மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் https://thethavamanitimes.com/national/union-finance-minister-nirmala-sitharaman-inaugurated-the-puducherry-lighthouse/ https://thethavamanitimes.com/national/union-finance-minister-nirmala-sitharaman-inaugurated-the-puducherry-lighthouse/#respond Fri, 26 Jun 2026 15:10:20 +0000 https://thethavamanitimes.com/?p=2452 The Thavamani Times,Published on: 

26 Jun 2026,

புதுச்சேரியில் நேற்று புதுப்பிக்கப்பட்ட, புகழ்பெற்ற பழைய கலங்கரை விளக்கத்தை திறந்து வைத்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது :-

புதுச்சேரி என்பது தமிழ், பிரெஞ்சு, இந்தியர், கடல்சார்ந்த மற்றும் உலகளாவிய தாக்கங்களின் சங்கமமாகும் என்று அவர் கூறினார். பழைய கலங்கரை விளக்கத்தை மீட்டெடுப்பதற்கான மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் முடிவு, நிறுவன பெருமிதத்தையும் பொது பாரம்பரியத்தின் மீதான பொறுப்புணர்வை காட்டுவதோடு, கலாச்சாரம் மற்றும் நினைவுகளின் பாதுகாவலர்களாக அரசு துறைகள் இருக்க முடியும் என்பதையும் இது காட்டுகிறது என்று அவர் தெரிவித்தார்.

பழைய கலங்கரை விளக்கம் 1836 முதல் நிலைத்து நிற்கிறது என்பதை சுட்டிக்காட்டிய நிதி மந்திரி, புதுப்பிக்கப்பட்ட இந்த பழைய கலங்கரை விளக்கத்தின் மூலம், புதுச்சேரியின் கடல்சார் வரலாறு, பழக்கவழக்கங்களின் பாரம்பரியம், வருங்கால சந்ததியினருக்காக பாரம்பரியத்தை பாதுகாப்பதில் இந்தியாவின் பரந்த அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய ஓர் அடையாள சின்னத்தை நாம் புதுப்பிக்கிறோம் என்று பொருள் என தெரிவித்தார்.

ஒரு காலத்தில் கடலின் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் கப்பல்களுக்கு கலங்கரை விளக்கம் வழிகாட்டியது போல், இன்று நவீன பொருளாதாரத்தின் சிக்கல்களுக்கு மத்தியில் பொருளாதார நிறுவனங்கள் வர்த்தகத்திற்கு வழிகாட்டுகின்றன என்று அவர் கூறினார். அவை நிலையானதாகவும், நேர்மையாகவும், சேவை மனப்பான்மையுடனும் இருக்க வேண்டும். அரசு நிறுவனங்கள் கொண்டிருக்க வேண்டிய கடமை, விழிப்புணர்வு, சேவை, நிலைத்தன்மை ஆகிய விழுமியங்களை புனரமைக்கப்பட்ட இந்த கலங்கரை விளக்கம் நினைவூட்டுகிறது என்று மந்திரி தெரிவித்தார்.

கலங்கரை விளக்கத்தின் பெருமையை மீட்பதில் மேற்கொண்ட முயற்சிகளுக்காக மத்திய பொதுப்பணி துறையையும் இந்திய தேசிய கலை மற்றும் கலாச்சார பாரம்பரிய அறக்கட்டளையையும் பாராட்டிய நிதி மந்திரி, இந்த வெற்றிகரமான புனரமைப்பு, இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற முயற்சிகளுக்கு ஒரு முன்மாதிரியாக அமையும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி யூனியன் பிரதேசத் துணைநிலை கவர்னர் கைலாசநாதன், முதல்-மந்திரி என். ரங்கசாமி, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி மற்றும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

]]>
https://thethavamanitimes.com/national/union-finance-minister-nirmala-sitharaman-inaugurated-the-puducherry-lighthouse/feed/ 0
அரசு முறைப் பயணமாக நாளை செஷல்ஸ் செல்கிறார் பிரதமர் மோடி https://thethavamanitimes.com/national/prime-minister-modi-will-be-visiting-seychelles-tomorrow-on-a-state-visit/ https://thethavamanitimes.com/national/prime-minister-modi-will-be-visiting-seychelles-tomorrow-on-a-state-visit/#respond Fri, 26 Jun 2026 11:00:29 +0000 https://thethavamanitimes.com/?p=2431 THE THAVAMANI TIMES, JUNE 26:

பிரதமர் மோடி நாளை (சனிக்கிழமை) 3 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான செஷல்ஸ் நாட்டுக்கு செல்கிறார்.

செஷல்ஸ் நாட்டின் 50-ம் ஆண்டு தேசிய தினம் வருகிற 29-ந்தேதி நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.இந்த பயணத்தின்போது செஷல்ஸ் அதிபர் பேட்ரிக்குடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

மேலும், செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் பிரதமர் மோடி அங்குள்ள இந்திய வம்சாவளியினரிடம் கலந்துரையாடுகிறார். வரலாறு, கலாசாரம், மக்கள் ரீதியிலான தொடர்புகளில் இந்தியாவும், செஷல்சும் நீண்டகால கூட்டுறவைக் கொண்டுள்ளன. பிரதமரின் தற்போதைய பயணம், இருதரப்பு வலுவான, நீடித்த உறவை மீண்டும் உறுதி செய்வதுடன், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும்’ என்று மத்திய வெளியுறவு அமைச்சரகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி ஏற்கனவே 2015-ஆம் ஆண்டு செஷல்ஸ் நாட்டுக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரவேற்பு பதாகை
செசல்ஸ் நாட்டின் தேசிய தின பொன்விழா கொண்டாட்டங்களில் பங்கேற்க செல்லும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் விதமாக, அந்நாட்டின் இந்திய வம்சாவளியினர் விக்டோரியா- மாஹே மற்றும் இந்திய தூதரகம் அமைந்துள்ள பகுதிகளில் பிரமாண்ட வரவேற்பு பதாகைகளை அமைத்துள்ளனர்.

அதில் ஒரு பதாகையில் இந்தியா மற்றும் செசல்ஸ் நாட்டு கொடிகள் இடம் பெற்றுள்ளன. நடுவில் பிரதமர் மோடி உள்ளார். மற்றொரு பதாகையில் மோடியின் படம் மட்டும் இடம்பெற்று உள்ளது. அவரை வரவேற்று வாசகம் இடம்பெற்றுள்ளது.

]]>
https://thethavamanitimes.com/national/prime-minister-modi-will-be-visiting-seychelles-tomorrow-on-a-state-visit/feed/ 0
வணிக LPG சிலிண்டர்கள் மீதான கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்! https://thethavamanitimes.com/national/restrictions-on-commercial-lpg-cylinders-completely-lifted/ https://thethavamanitimes.com/national/restrictions-on-commercial-lpg-cylinders-completely-lifted/#respond Thu, 25 Jun 2026 14:50:40 +0000 https://thethavamanitimes.com/?p=2373 THE THAVAMANI TIMES : JUNE 25, 

புதுடெல்லி ஜூன் 25, வணிக LPG சிலிண்டர்கள் மீதான கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்!

மத்திய கிழக்கு நெருக்கடியைத் தொடர்ந்து வணிக மற்றும் தொழில்துறை பயன்பாட்டுக்கான LPG விநியோகத்தில் விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் ஒன்றிய அரசு முழுமையாக நீக்கியுள்ளது.

வணிக (Non-domestic Packed LPG) சிலிண்டர்கள் நெருக்கடிக்கு முன்பிருந்த அளவில் மீண்டும் விநியோகிக்கப்படும். மேலும், Bulk LPG விநியோகத்தில் இருந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன.

உள்நாட்டு LPG உற்பத்தி மற்றும் இறக்குமதி நிலை சீராக உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ள

]]>
https://thethavamanitimes.com/national/restrictions-on-commercial-lpg-cylinders-completely-lifted/feed/ 0