Logo
Date of Publish : 25 June 2026, 6:45 am
Editor : S. Porkodi

மேல்பென்னாத்தூர் பள்ளியில் ஆயுர்வேத விழிப்புணர்வு முகாம்

THE THAVAMANI TIMES : JUNE 25, TIRUVANNAMALAI : 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மேல்பென்னாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் ஆயுஷ் துறை சார்பில் ஆயுர்வேத விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா. ஜெயந்தி தலைமை தாங்கினார். ஆயுஷ் மருத்துவர் புனிதவதி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆயுர்வேத மருத்துவ முறைகள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

மேலும், மாணவர்களின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும் நோக்கில் நோய் எதிர்ப்பு சக்தி சிரப் வழங்கப்பட்டது. ஆயுஷ் துறையின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே பாரம்பரிய மருத்துவ முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

நிகழ்வில் ஆசிரியர்கள் வேல்முருகன், சங்கீதா, நாராயணன், அரசு, மெஹரூன்னிசா, ஆறுமுகம், சுதா, ராஜாராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


All Rights Reserved By TheThavamaniTimes.
Print Save
  • முகப்பு
  • உலகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • சினிமா
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியம்
  • முகப்பு
  • உலகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • சினிமா
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியம்

Designed By www.Webdigitalway.com
( 9052933264 )