Logo
Date of Publish : 08 October 2026, 1:14 pm
Editor : S. Porkodi

திருவண்ணாமலையில் மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தொடக்கம்

திருவண்ணாமலையில் மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தொடக்கம்

 

பள்ளிக் கல்வித் துறை சார்பில் வருவாய் மாவட்ட அளவிலான மாணவிகளுக்கான தடகளப்போட்டிகளை திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து மாவட்ட அளவிலான மாணவிகளுக்காள தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளையும், பாராட்டு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் வழங்கினார்.

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 11 குறு மையங்களில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் முதல் 2 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலானப் போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் 92 பள்ளிகளைச் சேர்ந்த 736 மாணவிகளுக்கு 44 வகையான போட்டிகள் நடைபெற்றது. இன்று மாணவர்களுக்கான தடகள போட்டிகள் நடைபெறவுள்ளது.

மேலும் மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகளில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் மாணவ, மாணவிகள் இந்த மாதம் சேலம் மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன், வருவாய் கோட்டாட்சியர் செல்வம், முதன்மை கல்வி அலுலவர் முனிராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் சண்முகப்பிரியா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.


All Rights Reserved By TheThavamaniTimes.
Share Save
  • முகப்பு
  • உலகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • சினிமா
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியம்
  • Reporters
  • Reporter Apply
  • Verify Reporter
  • முகப்பு
  • உலகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • சினிமா
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியம்
  • Reporters
  • Reporter Apply
  • Verify Reporter

Designed By www.Webdigitalway.com
( 9052933264 )