THE THAVAMANI TIMES,
இதயா மகளிர் கல்லூரியில் தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் இதயா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில், தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (EDII-TN) சார்பில் “தொழில்முனைவு மற்றும் புத்தாக்கம்” குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கல்லூரி செயலாளர் அருட்சகோதரி சம்பூர்ண மேரி, அருட்சகோதரி லூர்து மேரி, அருட்சகோதரி மேரி சந்தானம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மாவட்ட திட்ட மேலாளர் R. அமர்நாத், M.E., சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மாணவிகளுக்கு தொழில்முனைவு மற்றும் புத்தாக்கம் தொடர்பான கருத்துகளை எடுத்துரைத்தார்.
மாணவிகள் புதிய தொழில் வாய்ப்புகளை அடையாளம் காணுதல், புதுமையான சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளுதல், தொழில்முனைவோராக உருவாகுவதற்கான வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை BBA துறைத் தலைவர் ராஜேஸ்வரி K., BBA உதவிப் பேராசிரியர் அருட்சகோதரி அந்தோணியம்மாள் மற்றும் EDC இணை ஒருங்கிணைப்பாளர் A. சரிதா ஆகியோர் செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் கல்லூரியின் அனைத்து துறை மாணவிகளும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.