Logo
Date of Publish : 27 June 2026, 5:25 am
Editor : S. Porkodi

இதயா மகளிர் கல்லூரி  வேலைவாய்ப்பு வழிகாட்டல் மற்றும் பணி நியமன ஆணை வழங்கும் விழா 

THE THAVAMANI TIMES, 

Published on June 27,

 திருவண்ணாமலை | 25.06.2026

செங்கம் அருகே புதுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள இதயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இறுதி ஆண்டு மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டல் மற்றும் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி உற்சாகமான முறையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பெங்களூருவைச் சேர்ந்த ஆஷிதா (HR Executive) மற்றும் ஆன்டோனியா குஷி (HR Executive) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவிகளுக்கு தொழில் வாய்ப்புகள், நிறுவனத் தேர்வு, நேர்காணல் திறன்கள் மற்றும் பணியிட ஒழுக்கம் குறித்து விரிவான விளக்கங்களை வழங்கினர்.

நிகழ்ச்சியை கல்லூரியின் செயலர் அருட்சகோதரி சம்பூர்ண மேரி, முதல்வர் அருட்சகோதரி முனைவர் லூர்து மேரி, நிர்வாக அலுவலர் அருட்சகோதரி சந்தன மேரி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். பின்னர் விருந்தினர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு நிகழ்ச்சி சிறப்பாக ஆரம்பமானது.

இந்நிகழ்ச்சியில் இறுதி ஆண்டு பயிலும் சுமார் 150 மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மாணவிகளின் எதிர்கால வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு, நிறுவனங்களை எவ்வாறு தேர்வு செய்வது, தங்களது திறமைகளை எவ்வாறு வெளிப்படுத்துவது, நேர்காணல்களில் வெற்றி பெற தேவையான தகவல் தொடர்புத் திறன், தன்னம்பிக்கை, குழு ஒருங்கிணைப்பு, தொழில்முறை அணுகுமுறை போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து சிறப்பு விருந்தினர்கள் எளிமையான முறையில் எடுத்துரைத்தனர்.

அதனைத் தொடர்ந்து மாணவிகள் சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு திறனறி தேர்வுகள் நடத்தப்பட்டன. பின்னர் நேர்காணல் (Interview) மூலம் அவர்களின் திறமைகள் மதிப்பீடு செய்யப்பட்டன. தேர்வில் சிறப்பாக செயல்பட்ட மாணவிகளுக்கு பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணைகள் (Offer Letters) வழங்கப்பட்டன.

பணி நியமன ஆணைகளை பெற்ற மாணவிகள் மகிழ்ச்சியுடன் தங்களது நன்றியை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சி மாணவிகளின் தொழில் வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிக்கும் வகையில் அமைந்தது.

நிகழ்ச்சியின் நிறைவில் கல்லூரி செயலர் அருட்சகோதரி சம்பூர்ண மேரி சிறப்புரையாற்றி, மாணவிகள் தங்களது கல்வியுடன் சேர்த்து திறன்களையும் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டு சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனுள்ளவர்களாக உயர வேண்டும் என வாழ்த்தினார். இறுதியாக அனைவருக்கும் நன்றி தெரிவித்து நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.


All Rights Reserved By TheThavamaniTimes.
Print Save
  • முகப்பு
  • உலகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • சினிமா
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியம்
  • Reporters
  • Reporter Apply
  • Verify Reporter
  • முகப்பு
  • உலகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • சினிமா
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியம்
  • Reporters
  • Reporter Apply
  • Verify Reporter

Designed By www.Webdigitalway.com
( 9052933264 )