The Thavamani Times, Published on 29June 2026,
திருவண்ணாமலை ஜூன் 29
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சி பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முன்னாள் தொழிற்கல்வி ஆசிரியர் எழில்மாறனின் நினைவு நூலக கட்டிடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது, இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கே.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார், பள்ளி உதவி தலைமை ஆசிரியர் அமானுல்லா அனைவரையும் வரவேற்றார், சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.முனிராஜ் பங்கேற்று ரூபாய் 13.20 இலட்ச மதிப்பீட்டில் புதிய நூலக கட்டிடத்தை ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்று திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ் பேசுகையில் :
இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நீங்கள் நன்றாக படித்து படிப்பின் மீது கவனம் செலுத்தி சிறந்த அரசு அதிகாரிகளாக வரவேண்டும் என்றும்
மாணவர்கள் அரசு தேர்வுகளில் வெற்றி பெற இந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களை வாசித்து வெற்றி பெற்று இந்த பள்ளிக்கும் பெற்றோருக்கும் இந்த கிராமத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும், மாணவர்கள் வாழ்வில் வெற்றி அடைய உழைப்பு, நேர்மை, நற்பண்பு, அவசியம் உலகிலே திறமையான இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது எதிர்காலத்தில் மேன்மேலும் வளமான மற்றும் வலிமையான நாடாக இந்தியா உயர மாணவர்களின் பங்களிப்பும் முக்கியம், மலை உயரம் என்று தயக்கம் கொண்டால் அதன் சிகரத்தை அடைய முடியாது முயன்றால் முடியாதது எதுவுமில்லை முயற்சி தான் முக்கியம் ஒவ்வொரு மாணவர்களும் ஒவ்வொரு விதமான தனிதிறன் உள்ளது, அதை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் அரசு வழங்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், தொழில் முனைவராக முன்னேற்றம் பெறுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. வேலை தேடுபவராக இல்லாமல் பலருக்கு வேலை வழங்குபவராக முன்னேற வேண்டும், மாணவர்கள் படித்து நல்ல நிலைக்குச் சென்றவுடன் தனது பெற்றோர்களின் ஆசிரியர்களையும் என்றைக்கும் நன்றியுடன் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் இவ்வாறாக முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ் சிறப்புரையாற்றினார்
இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சாமிநாதன், துணைத் தலைவர் முகில்தம்மபிரியன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் புஷ்பா ஏழுமலை, முன்னாள் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் கோவிந்தசாமி, மிதூன்கார்த்தி, சேகர், உள்ளிட்ட பள்ளி இருபால் ஆசிரியர்களும் மாணவர்களும் அரசு அதிகாரிகளும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களும் பலர் பங்கேற்றனர். இறுதியாக நன்கொடையாளர் அருள்மொழி நன்றி கூறினார்