The Thavamani Times,
Published on 06 July 2026 at 6.04 pm,
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த நாச்சிப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில், அகில இந்திய பேனா நண்பர் பேரவையின் சிறப்புக் கூட்டம் உற்சா கமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவரும், பேனா நண்பர் பேரவை உறுப்பினருமான அக்ரி வெங்கடாஜலபதி தலைமை தாங்கினார். ஆன்மீக சொற்பொழிவாளரும் பேரவை உறுப்பினருமான தனஞ்செயன் வரவேற்புரை வழங்கி, நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
திருவண்ணாமலை மண்டல பேனா நண்பர் பேரவை தலைவரும், மாவட்ட ரெட்கிராஸ் தலைவருமான இந்திரராஜன், கடந்த 30 ஆண்டுகளாக பேனா நண்பர் பேரவை மேற்கொண்டு வரும் சமூக சேவைகள், அதன் நோக்கங்கள் மற்றும் மனிதநேய பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம் மேல்நிலைப்பள்ளி, பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நிவேதா மெட்ரிகுலேஷன் பள்ளி, ஸ்ரீ சக்தி மழலையர் பள்ளி மற்றும் சிருஷ்டி மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு "அன்பு, நட்பு, மனிதநேயம்" என்ற தலைப்பில் தங்களது சிந்தனைகளை பகிர்ந்து கொண்டனர்.
அகில இந்திய பேனா நண்பர் பேரவை அறங்காவலர் முத்து செல்வராஜ் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அகில இந்திய பேனா நண்பர் பேரவை தலைவர் மும்பை கருண், மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் புத்தகங்களை வழங்கி பாராட்டினார். மேலும், பேரவை உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.
அப்போது பேசிய அவர், அன்பு, நட்பு, மனிதநேயம் ஆகிய உயர்ந்த பண்புகளை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் மிக முக்கியமான பங்காற்றுகின்றன என்றும், கல்வி நிறுவனங்களில் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியின் நிறைவில் கல்லூரி முதல்வர் செந்தில் முருகன் நன்றியுரை வழங்கினார். இதில் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பேரவை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
அன்பு, நட்பு, மனிதநேயம் என்ற உயர்ந்த மனிதப் பண்புகளை மாணவர்களின் மனதில் விதைக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, அனைவரின் பாராட்டையும் பெற்றது.
விழாவில் பேரவை உறுப்பினர்கள் முன்னாள் கூட்டுறவு சங்க துணை தலைவரும் நிவேதா பள்ளி தாளாளருமான நாச்சி ப்பட்டு கோபி. முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பென்னா த்தூர் முருகன், செங்கம் நகர மன்ற உறுப்பினர் முருகம ணி, கோட்டக் மகேந்திரா நிறுவன மேலாளர் ரமேஷ், செங்கம் வட்ட தமிழ் சங்க செயலாளர் அசோக்குமார். முன்னாள் பேரூராட்சி உறுப் பினர் அப்துல்வாஹித், வழக்கறிஞர் முகமது அன்சர், உடற்கல்வி ஆசிரியர் சரவணக்குமார், பள்ளி ஆசிரியர்கள் அசோக்குமார், துர்கா, சோனியா, ஆனந்தி ஆனந்தி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண் டனர்.