Logo
Date of Publish : 28 June 2026, 11:27 am
Editor : S. Porkodi

தேசிய போலியோ முகாம்: டி.எஸ். வேலு தொடக்கம் 

The Thavamani Times, Published on 28 June 2026

திருவண்ணாமலை ஜூன் 28 :

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தேசிய போலியோ சொட்டு மருந்து முகாமை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் டி.எஸ். வேலு அவர்கள் தொடங்கி வைத்தார். 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ நோயை முற்றிலும் தடுக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 43,051 மையங்களில் இந்த தேசிய போலியோ முகாம் நடைபெற்றது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு கட்டாயம் போலியோ சொட்டு மருந்து அளிக்க வேண்டும் என சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சிலம்பரசன் தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் இணைந்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியை மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு முகாமை சிறப்பித்தனர். குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில் தேசிய போலியோ ஒழிப்பு திட்டத்திற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


All Rights Reserved By TheThavamaniTimes.
Print Save
  • முகப்பு
  • உலகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • சினிமா
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியம்
  • முகப்பு
  • உலகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • சினிமா
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியம்

Designed By www.Webdigitalway.com
( 9052933264 )