Logo
Date of Publish : 29 July 2026, 1:26 pm
Editor : S. Porkodi

இதயா மகளிர் கல்லூரியில் பாராளுமன்ற அமைச்சரவை பதவியேற்பு விழா..

THE THAVAMANI TIMES :

திருவண்ணாமலை, ஜூலை 29:

திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை அடுத்த புதுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் இதயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாராளுமன்ற அமைச்சரவை நிர்வாகிகளுக்கான "Investiture Ceremony – 2026" (பதவியேற்பு விழா) கல்லூரி அரங்கில் நடைபெற்றது .

விழாவில் கல்லூரியின் செயலர் அருட் சகோதரி சம்பூர்ண மேரி, முதல்வர் அருட்சகோதரி முனைவர் லூர்து மேரி, நிர்வாகி அருட்சகோதரி சந்தன மேரி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்வை தொடங்கி வைத்தனர். நிகழ்வின் முன்னதாககல்லூரியின் செயலர் அருட் சகோதரி சம்பூர்ண மேரி அனைவரையும் வரவேற்று பேசினார் 

 பதவி ஏற்பு விழாவில் 

OBU Skilltech and Innovation Centre நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி முனைவர் ஒப்புலி சாமி பார்த்திப கார்த்திகேயன் தலைமை விருந்தினராகவும், அதே நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் செயல்பாட்டு அலுவலர் கே. ஜெயபிரகாஷ் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர் கல்லூரியில் மாதிரி பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு .தேர்தலில் வென்ற மாணவிகளின் தலைவர் ஷெர்லின் 

துணைத்தலைவர் லெனினா மாணவச் செயலர் ஆதிலட்சுமி , துணைச் செயலர் சையத் சமீரா , மற்றும் அமைச்சரவை மாணவிகளுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் பதவியேற்பு செய்து வைத்து அவர்களின் பொறுப்புகளை உணர்த்தும் வகையில்ஆளுமைத் திறன் என்பது வெளிப்புற தோற்றம் மட்டுமல்ல. ஒருவரின் சிந்தனை, பேச்சு, நடத்தை, ஒழுக்கம், பொறுப்புணர்வு, தன்னம்பிக்கை மற்றும் பிறரை மதிக்கும் பண்பு ஆகிய அனைத்தும் இணைந்ததே உண்மையான ஆளுமையாகும்.

ஒரு மாணவர் புத்தக அறிவைப் பெறுவது மட்டுமே போதாது. நல்ல குணநலன்கள், நேரத்தை மதிக்கும் பழக்கம், குழுவாக செயல்படும் திறன், பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திறன் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவையும் அவசியம்., என்று சிறப்புரை ஆற்றி வாழ்த்துக்களை தெரிவித்தனர். மாணவிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்று தங்களது பதவிக்கான பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர்.

கல்லூரி செயலாளர் அருட்சகோதரி சம்பூர்ணா மேரி, முதல்வர் அருட்சகோதரி டாக்டர் லூர்து மேரி, நிர்வாகி அருட்சகோதரி மேரி சந்தானம் ஆகியோர் விழாவிற்கு தலைமை தாங்கி சிறப்பிக்க உள்ளனர்.

மாணவர்களிடம் தலைமைத்துவம், பொறுப்புணர்வு, ஒழுக்கம் மற்றும் சேவை மனப்பான்மையை வளர்க்கும் நோக்கில் நடைபெறும் இந்த பதவியேற்பு விழாவில்,அக்பர் பாஷா இயக்குநர் மற்றும் சுரேஷ் ரோட்டரி கிளப் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். 

 கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக பங்கேற்றனர். இறுதியில் முதல்வர் மற்றும் செயலர் மாணவிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றிய நிகழ்வை இனிதே நிறைவு செய்தனர்.


All Rights Reserved By TheThavamaniTimes.
Print Save
  • முகப்பு
  • உலகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • சினிமா
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியம்
  • Reporters
  • Reporter Apply
  • Verify Reporter
  • முகப்பு
  • உலகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • சினிமா
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியம்
  • Reporters
  • Reporter Apply
  • Verify Reporter

Designed By www.Webdigitalway.com
( 9052933264 )