Logo
Date of Publish : 25 August 2026, 2:29 pm
Editor : S. Porkodi

கதிரம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

THE THAVAMANI TIMES

கதிரம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

திருப்பத்தூர், ஆக.25: திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டாரத்திற்குட்பட்ட கதிரம்பட்டி கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தில், பாவை பவுண்டேஷன் சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

நிகழ்ச்சிக்கு மருத்துவ அலுவலர் ஷர்மிளா தலைமை வகித்தார். பாவை பவுண்டேஷன் சார்பில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவப் பயன்பாட்டிற்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு பணிகளை ஒருங்கிணைப்பாளர் துளசி நாதன் செய்திருந்தார்

 

இந்நிகழ்ச்சியில் மருத்துவப் பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிராமப்புற மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகள் கிடைக்க உதவும் வகையில் மருத்துவ உபகரணங்களை வழங்கிய பாவை பவுண்டேஷன் நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

 

 

– THE THAVAMANI TIMES


All Rights Reserved By TheThavamaniTimes.
Print Save
  • முகப்பு
  • உலகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • சினிமா
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியம்
  • Reporters
  • Reporter Apply
  • Verify Reporter
  • முகப்பு
  • உலகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • சினிமா
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியம்
  • Reporters
  • Reporter Apply
  • Verify Reporter

Designed By www.Webdigitalway.com
( 9052933264 )