www.thethavamanitimes.com தமிழகத்தின் நம்பகமான தமிழ் செய்திதளம்
அமோனியா வாயு கசிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
திருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இதனை தெரியப்படுத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ், அவர்கள் அனைவரும் பெண் தொழிலாளர்கள் என்று தெரிவித்தார். அமோனியா வாயு கசிவால் 74 பேர் பாதிக்கப்பட்டதாகவும், 42 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார். அமைச்சரின் பேச்சுக்கு முன்பே, அமோனியா வாயு கசிவு விபத்து குறித்து விவாதிக்க வேண்டும் என்று திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டன. அதனை ஏற்க மறுத்த சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர், அவை உறுப்பினர்கள் தங்களுக்கு வாய்ப்பு தரப்படும் போது அதுகுறித்து பேசலாம் என்று தெரிவித்தார்.
6/22/2026
My post content
