Logo
Date of Publish : 26 June 2026, 11:55 am
Editor : S. Porkodi

வெனிசுலாவுக்கு இந்தியாவின் ‘Operation Amistad’ நிவாரண திட்டம்

THE THAVAMANI TIMES

🟥 26.06.2026 | புதுடெல்லி
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியாவின் 'Operation Amistad' நிவாரண திட்டம்
வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 'Operation Amistad' என்ற பெயரில் மிகப்பெரிய மனிதாபிமான நிவாரண திட்டத்தை இந்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு C-17 Globemaster சரக்கு விமானங்கள் மூலம் 35 டன்னுக்கும் அதிகமான அவசர நிவாரணப் பொருட்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வெனிசுலாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மேலும், பேரிடர் பகுதிகளில் உடனடி மருத்துவச் சேவைகளை வழங்குவதற்காக 41 பேர் கொண்ட இந்திய சிறப்பு மருத்துவக் குழுவும் வெனிசுலாவிற்கு விரைந்துள்ளது.
இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை விரைவாக வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.


All Rights Reserved By TheThavamaniTimes.
Print Save
  • முகப்பு
  • உலகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • சினிமா
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியம்
  • Reporters
  • Reporter Apply
  • Verify Reporter
  • முகப்பு
  • உலகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • சினிமா
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியம்
  • Reporters
  • Reporter Apply
  • Verify Reporter

Designed By www.Webdigitalway.com
( 9052933264 )