Logo
Date of Publish : 07 October 2026, 1:06 pm
Editor : S. Porkodi

கணித மேதை மகேஷ் காக்டேவுக்கு ராமானுஜர் விருது

. THE THAVAMANI TIMES, 2026 October 7,

கணித மேதை மகேஷ் காக்டேவுக்கு ராமானுஜர் விருது

 

பெங்களூரு, அக். 7:

வளரும் நாடுகளைச் சேர்ந்த இளம் கணிதவியலாளர்களின் சிறப்பான ஆய்வுப் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், இத்தாலியின் ட்ரியேஸ்டே நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச கோட்பாட்டு இயற்பியல் மையம் (ICTP) மற்றும் சர்வதேச கணித ஒன்றியம் (IMU) இணைந்து வழங்கும் 2026-ஆம் ஆண்டுக்கான ராமானுஜர் பரிசு, இந்திய கணிதவியலாளர் பேராசிரியர் மகேஷ் காக்டேவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

2005-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இப்பரிசு, வளரும் நாடுகளில் சிறப்பான கணித ஆராய்ச்சியை மேற்கொள்ளும் 45 வயதுக்குட்பட்ட கணிதவியலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. பரிசுடன் 10,000 அமெரிக்க டாலர் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது.

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (IISc) கணிதப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் மகேஷ் காக்டே, அல்ஜீப்ரிக் நம்பர் தியரி துறையில் ஆற்றிய முக்கியப் பங்களிப்புகளுக்காக இவ்விருதைப் பெற்றுள்ளார். குறிப்பாக, Noncommutative Iwasawa Theory, Gross-Stark மற்றும் Brumer-Stark கோட்பாடுகள் தொடர்பான அவரது ஆய்வுகள் குறிப்பிடத்தக்கவை.

மேலும், ஜெர்மன் கணித மேதை டேவிட் ஹில்பர்ட் முன்வைத்த 23 கணிதப் பிரச்சினைகளில் ஒன்றான ஹில்பர்ட்டின் 12-வது பிரச்சினை தொடர்பான ஆய்வுகளுக்கும் மகேஷ் காக்டேவின் பணிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

யார் இந்த மகேஷ் காக்டே?

மகேஷ் காக்டே பெங்களூருவில் உள்ள Indian Statistical Institute-ல் கணிதத்தில் இளநிலைப் பட்டம் பெற்றார். பின்னர் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்பைத் தொடர்ந்து, 2008-ஆம் ஆண்டு தூய கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

முனைவர் பட்டத்திற்குப் பிறகு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், யுனிவர்சிட்டி காலேஜ் லண்டன் மற்றும் கிங்ஸ் காலேஜ் லண்டன் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றினார். பின்னர் 2019-ஆம் ஆண்டு இந்தியா திரும்பி, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (IISc) இணைந்தார்.

இந்திய கணித உலகிற்கு பெருமை சேர்த்துள்ள மகேஷ் காக்டேவுக்கு ராமானுஜர் விருது வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

- செய்தி ஆசிரியர் சரவணகுமார்M

 


All Rights Reserved By TheThavamaniTimes.
Share Save
  • முகப்பு
  • உலகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • சினிமா
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியம்
  • Reporters
  • Reporter Apply
  • Verify Reporter
  • முகப்பு
  • உலகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • சினிமா
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியம்
  • Reporters
  • Reporter Apply
  • Verify Reporter

Designed By www.Webdigitalway.com
( 9052933264 )