Logo
Date of Publish : 02 July 2026, 12:17 pm
Editor : S. Porkodi

பயிர் கடன் தள்ளுபடி     முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார்- அமைச்சர் வினோத்-

The Thavamani Times, Published on: 02 Jul 2026, 05.41pm

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைபட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2025-2026-ம் ஆண்டு சிறப்பு பருவம் மற்றும் 2026- 2027-ம் ஆண்டு முதன்மை அரவை தொடக்க விழா நடைபெற்றது.

அமைச்சர் பங்கேற்பு
விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் வினோத் கலந்து கொண்டு கரும்பு அரவை பணியினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து சர்க்கரை ஆலையில் அமைக்கப்பட்டிருந்த கரும்பு அரவை குறித்த கண்காட்சியினை பார்வையிட்டார்.

மேலும் கரும்பு அரவை குறித்தும், எந்திரத்தின் பயன்பாடுகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்து ஆய்வு செய்தார். நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பத்மஜா தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் முன்னிலை வகித்தார்.

முதலமைச்சர் அறிவிப்பார்
பின்னர் அமைச்சர் வினோத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

விவசாயிகளின் பயிர் கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்வது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் விரைவில் அறிவிப்பார். கரும்புக்கான ஆதார விலை உள்ளிட்டவை குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்.
வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள விவசாயிகளிடம் கோரிக்கைகள் கேட்கப்பட்டு வருவதாகவும் அந்தந்த பகுதி விவசாயிகள் பலன் அடையும் வகையில் திட்டங்கள் பட்ஜெட்டில் கொண்டு வரப்படும் என்றார்.


All Rights Reserved By TheThavamaniTimes.
Print Save
  • முகப்பு
  • உலகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • சினிமா
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியம்
  • Reporters
  • Reporter Apply
  • Verify Reporter
  • முகப்பு
  • உலகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • சினிமா
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியம்
  • Reporters
  • Reporter Apply
  • Verify Reporter

Designed By www.Webdigitalway.com
( 9052933264 )