Logo
Date of Publish : 29 September 2026, 3:08 am
Editor : S. Porkodi

கருவியப்பட்டி பள்ளி ஆசிரியர் அ. தீபாவுக்கு “அறிவுச்சுடர் விருது”

28.09.2026 / THE THAVAMANI TIMES

கருவியப்பட்டி பள்ளி ஆசிரியர் அ. தீபாவுக்கு "அறிவுச்சுடர் விருது"

சிவகங்கை, செப். 28:

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியம் கருவியப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வரும் அ.தீபா அவர்களுக்கு ” அறிவு சுடர் விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டது.

லயன்ஸ் கிளப் ஆப் காரைக்குடி சிட்டி 3242B 111293 மண்டலம் வாட்டர்மிலன்,கிளப் எண் D4 சார்பில் 2026-2027ஆம் ஆண்டிற்கான மாவட்ட ஆசிரியர் தின விழா காரைக்குடி தொல்காப்பியர் அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்வி பணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் 50 ஆசிரியர்களுக்கு "அறிவுச்சுடர் விருது" வழங்கப்பட்டது.

இதில், கருவியப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர் அ. தீபாவுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

"நல்ல ஆசிரியர்கள் நல்ல சமுதாயத்தை உருவாக்குகிறார்கள்”

விழாவிற்கு PMJF Lion என். ஆறுமுகம் , ராசி மோட்டார்ஸ் உரிமையாளர் எஸ்தர் சாண்டியாகு , மாவட்டத் தலைவர் டென்சிங் அருள்ராஜ் , லயன்ஸ் சங்க நிர்வாகிகள் , தேவகோட்டை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் செந்தில்குமரன் , வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வகுமார் , சாக்கோட்டை வட்டார கல்வி அலுவலர் ரேவதி சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

ஆசிரியர் தீபாவுக்கு இந்த விருது கிடைத்ததை தொடர்ந்து, கருவியபட்டி பள்ளி தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். சாக்கோட்டை ஒன்றியம் கருவியப்பட்டி பள்ளி பள்ளி ஆசிரியருக்கு கிடைத்த இந்த விருது, பள்ளிக்கும், மாணவர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளது.

THE THAVAMANI TIMES


All Rights Reserved By TheThavamaniTimes.
Share Save
  • முகப்பு
  • உலகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • சினிமா
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியம்
  • Reporters
  • Reporter Apply
  • Verify Reporter
  • முகப்பு
  • உலகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • சினிமா
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியம்
  • Reporters
  • Reporter Apply
  • Verify Reporter

Designed By www.Webdigitalway.com
( 9052933264 )