Logo
Date of Publish : 11 October 2026, 2:04 pm
Editor : S. Porkodi

சென்னை மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

THE THAVAMANI TIMES

சென்னை மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

ஐஐடி மெட்ராஸ் மூளை ஆராய்ச்சி மையமும் தொடக்கம்; தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு தேவை – முதல்வர் விஜய்

சென்னை, அக். 11:

சென்னைக்கு இன்று வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, பூந்தமல்லி – வடபழனி இடையிலான சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட சேவையைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் விஜய் பங்கேற்றார். தொடர்ந்து, சென்னை ஐஐடி வளாகத்தில் அமைந்துள்ள சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகத்தின் வளர்ச்சியே இலக்கு!

நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் விஜய் பேசியதாவது:

தமிழ்நாடு பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான பண்பாட்டையும், அந்தப் பண்பாட்டை இன்றளவும் உயிர்ப்புடன் பாதுகாத்து வரும் மக்களையும் கொண்ட மாநிலமாகும். உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழைக் கொண்ட இம்மாநிலம், சிறப்புமிக்க வரலாறு, கட்டடக்கலை மற்றும் பண்பாட்டு மரபுகளால் தனித்துவம் பெற்றுள்ளது.

எங்கள் அரசு அமைந்த முதல் 100 நாட்களில் ஊழலற்ற அரசாகச் செயல்பட்டு வருகிறது. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற உயரிய தத்துவத்தின் அடிப்படையில், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்து வருகிறோம்.

கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, மீனவர் நலன் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை இலக்காகக் கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது. குழந்தைகள், பெண்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

வலுவான மாநிலங்களே வலுவான இந்தியாவை உருவாக்கும்!

தொழில், அறிவியல், கல்வி, கலை, இலக்கியம் மற்றும் சமூகநீதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவின் முன்னேற்றத்திற்குத் தமிழ்நாடு தொடர்ந்து பங்களித்து வருகிறது.

“வலுவான மாநிலங்களே வலுவான இந்தியாவை உருவாக்கும்” என்பதே எங்களது நிலைப்பாடு. மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்பட வேண்டும். இரு அரசுகளும் இணைந்து செயல்படும்போது, அதன் பலன்கள் நேரடியாக மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும் என்பதே எங்களது அணுகுமுறையாகும்.

தமிழ்நாடு புதிய வாய்ப்புகளை உருவாக்கி, 2036-ஆம் ஆண்டில் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கிப் பயணித்து வருகிறது. வேளாண்மை, தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வதுடன், அதன் பயன்கள் சென்னையைத் தாண்டி தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலும் அரசு செயல்பட்டு வருகிறது.

கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு ஒப்புதல் கோரிக்கை!

ஓசூர் – பொம்மசந்திரா மெட்ரோ ரயில் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களும் பயனடையும்.

தமிழ்நாட்டிற்கு கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களும் தேவைப்படுகின்றன. சென்னை மெட்ரோ ரயில் மூன்றாம் கட்டத் திட்டமும் அவசியமாகும். எனவே, கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களை மறுஆய்வு செய்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்கிறேன்.

இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.

மா.சரவணக்குமார் 

செய்தி ஆசிரியர் 


All Rights Reserved By TheThavamaniTimes.
Share Save
  • முகப்பு
  • உலகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • சினிமா
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியம்
  • Reporters
  • Reporter Apply
  • Verify Reporter
  • முகப்பு
  • உலகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • சினிமா
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியம்
  • Reporters
  • Reporter Apply
  • Verify Reporter

Designed By www.Webdigitalway.com
( 9052933264 )