The Thavamani Times, Published on June 27:
சென்னை | 27.06.2026
மறைந்த இயக்குநர், நடிகர் மற்றும் எழுத்தாளரான கே. பாக்யராஜ் அவர்களின் மறைவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
“இயக்குநரும், எழுத்தாளருமான பாக்யராஜ் அவர்களின் மறைவு, திரையுலகிற்கு பேரிழப்பாகும். தனித்துவமான கதை சொல்லும் திறன், படைப்பாற்றல் மற்றும் தமிழ் சினிமாவிற்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பால், ரசிகர்களின் இதயங்களில் என்றும் அவர் நிலைத்திருப்பார்.”
என தெரிவித்துள்ளார். மேலும், பாக்யராஜ் அவர்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களை ஆளுநர் தெரிவித்தார்.