Logo
Date of Publish : 27 June 2026, 3:21 am
Editor : S. Porkodi

ஈராக்-ஐ வீழ்த்தி அபார வெற்றி பெற்ற செனகல்..

The Thavamanii Times  ஜூன் 27:

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய போட்டியில் செனகெல் மற்றும் ஈராக் அணிகள் மோதின. டொரொன்டோ மைதானத்தில் நடந்த இந்தப் போட்டி தொடங்கிய 4-ஆவது நிமிடத்திலேயே செனகெல் அணி கோல் கணக்கை தொடங்கியது.

செனகல் அணியின் அப்தொல்யெ செக் அசிஸ்ட்-இல் ஹபிப் டியெரா கோல் அடித்து அசத்தினார். இதைத் தொடர்ந்து இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரம் காட்டினர். எனினும், இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பாதி வரை செனகல் அணி 1-0 கணக்கில் முன்னிலை பெற்றது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் லேமைன் கமரா அசிஸ்ட்-இல் இஸ்மாய்லா சர் கோல் அடிக்க செனகல் அணி 2-0 கணக்கில் முன்னிலையை வலுப்படுத்தியது. மறுப்பக்கம் ஈராக் கோல் அடிக்கும் முற்சியை தொடர்ந்தது. ஆட்டத்தின் 59-ஆவது நிமிடம், 71-ஆவது நிமிடம் மற்றும் 82-ஆவது நிமிடங்களில் செனகெல் கோல் கணக்கை வலுப்படுத்திக் கொண்டே வந்தது.

செனகல் கோல் கணக்கை அதிகரிக்க, ஈராக் கடைசி வரை கோல் கணக்கை தொடங்க முடியாமல் திணறியது. செனகல் தரப்பில் பெபெ அடுத்தடுத்து இரு கோல்களையும், இலிமேன் டியெ கோல் அடித்தனர். ஆட்டத்தின் இறுதியில் செனகல் அணி 5-0 கணக்கில் ஈராக்-ஐ வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.


All Rights Reserved By TheThavamaniTimes.
Print Save
  • முகப்பு
  • உலகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • சினிமா
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியம்
  • முகப்பு
  • உலகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • சினிமா
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியம்

Designed By www.Webdigitalway.com
( 9052933264 )