
THE THAVAMANI TIMES, JUNE 26, CHENNAI :
சென்னை ஜூன் 26:
மாரத்தானை கொடியசைத்து தொடங்கி வைத்து, முதலமைச்சர் விஜயும் பங்கேற்பு
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, “ஸ்டார்ட் RUN – ஸ்டாப் DRUGS” என்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தானை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று சென்னை அண்ணா நினைவிடத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி இளைஞர்களிடையே போதைப்பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்றது.
- மாரத்தானை தொடங்கி வைத்ததுடன், முதலமைச்சர் விஜயும் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களுடன் இணைந்து ஓடி, “போதை இல்லா தமிழகம்” என்ற விழிப்புணர்வு செய்தியை வலியுறுத்தினார்.








