
THE THAVAMANI TIMES, Published on August 03 2026,
செங்கம் பாரத சாரணர் இயக்கம் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி முகாம்
மாவட்ட கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வன் பங்கேற்பு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் முறையாறு, டாக்டர் மீனாட்சி கல்வியியல் கல்லூரி வளாகத்தில், செங்கம் சாரண சாரணிய இயக்கம் சார்பில் சாரண, சாரணியர் ஆசிரியர்களுக்கான ஒருநாள் புத்தாக்கப் பயிற்சி முகாம் 03.09.2026 அன்று நடைபெற்றது.
பயிற்சி முகாமில் மாவட்டச் செயலர் ம. வெங்கடேஷ் வரவேற்றார், செங்கம் வட்டார கல்வி அலுவலர் பிரகாஷ் அவர்கள் சாரணிய இயக்கத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
டாக்டர் மீனாட்சி கல்வியியல் கல்லூரி நிர்வாக அலுவலர் ஏகாம்பரம் மற்றும் பள்ளி துணை ஆய்வாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கல்வி அலுவலரும், மாவட்ட முதன்மை ஆணையருமான தமிழ்ச்செல்வன் தலைமை வகித்து சாரணர்–சாரணியர் ஆசிரியர்களுக்கு சார்ட்டர் மற்றும் வாரண்ட் வழங்கி பேசினார்.
பள்ளிக்கல்வித் துறையின் அறிவுறுத்தலின்படி அனைத்து பள்ளிகளிலும் சாரணர்–சாரணியர் இயக்கத்தை தொடங்கி செயல்படுத்த வேண்டும் என்றும், மாணவர்கள் அதிக அளவில் ராஜ்யபுரஸ்கார் மற்றும் ராஷ்டிரபதி விருதுகளை பெறுவதற்கு ஆசிரியர்கள் உரிய பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பயிற்சியில் மாவட்ட அமைப்பு ஆணையர் (சாரணர் பிரிவு) செந்தமிழ்செல்வன், மாவட்ட பயிற்சி ஆணையர் பாலகுமார், மாவட்ட அமைப்பு ஆணையர் (சாரணியர் பிரிவு) பூங்குழலி, இணை செயலர் ஸ்டெல்லா, ஆகியோர் சாரண இயக்கத்தின் அடிப்படைகள், முன்னேற்றப் படிநிலைகள், இயக்கப் பாடல்கள், உறுதிமொழி, சட்டம், சாரண ஆசிரியர்களின் கடமைகள், அணிமுறைப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளித்தனர்.
மாவட்ட கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வன் முன்னிலையில் நடைபெற்ற இப்பயிற்சியில் செங்கம், புதுப்பாளையம், தண்டராம்பட்டு ஒன்றியங்களில் இருந்து அரசு பள்ளி, தனியார் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள் சேர்ந்த 80-க்கும் மேற்பட்டஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர். நிகழ்வின் நிறைவில் மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட பொறுப்பாளர்களுடன் இணைந்து மாவட்ட பயிற்சியாளர் சரவணகும குமார் ஏற்பாடு செய்திருந்தார்.








