
THE THAVAMANI TIMES JUNE 26, VENEZUELA : வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதுவரை 188 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மாயமானோர் எண்ணிக்கை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகினாலும், அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் வெளியாகவில்லை.









