
செங்கத்தில் பாஜக சார்பில் சேவா ஜோதி பேரணி
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் 25 ஆண்டுகால சேவைப் பயணத்தை நினைவுகூரும் வகையில், திருவண்ணாமலை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் செங்கத்தில் “சேவா சங்கல்ப் அபியான்” (Seva Sankalp Abhiyan) திட்டத்தின் கீழ் சேவா ஜோதி பேரணி நடைபெற்றது.
மாவட்டத் தலைவர்கள் K. ரமேஷ், கவிதா வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில், மாநில ஊரக உள்ளாட்சி பிரிவு தலைவர் பாஸ்கர், ஊடகப் பிரிவு மாநிலத் தலைவர் ரங்கநாயகுலு, பெருங்கோட்ட அமைப்புச் செயலாளர் குணசேகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், தொழிலதிபரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகியுமான ஜம்பு குமார் ஜெயின் சேவா ஜோதியை ஏற்றி வைத்தார்.
இதில் மாநில, மாவட்ட, மண்டல் மற்றும் பல்வேறு அணி, பிரிவு நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Post Views: 21








