
THE THAVAMANI TIMES :
25.06.2026 | திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், மத்திய அரசின் அலட்சியத்தால் ஏற்பட்டதாகக் கூறப்படும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, திடீர் தேர்வு ரத்து, கட்டாய மறுதேர்வுகள், பணியாளர் ஆட்சேர்ப்பில் நிலவும் தாமதம் மற்றும் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக மாநிலம் தழுவிய விழிப்புணர்வு மற்றும் ஊடகப் பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், மாவட்டத் தலைவர் கே. குணசேகரன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டத் தலைவர் செங்கம் ஜி. குமார், அகில இந்திய ஓபிசி அணி பிரிவு செயலாளர் மோகன், மாவட்ட துணைத் தலைவர்கள் ராஜி, மாரி, செங்கம் நகரத் தலைவர் காந்தி, வட்டாரத் தலைவர் நேரு, இளையராஜா, சிவாஜி, சுப்பிரமணி, ஊடகப்பிரிவு முன்னாள் தலைவர் ராமநாதன், ரத்தினம், வீரமணி, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சஞ்சய், ரங்கன், பாலன், சம்பத், கவிச்செல்வம் மற்றும் ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் கே.கே. அரவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.








